பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சர்வதேச மத சுதந்திர அறிக்கை :
நிராகரித்தது மோடி அரசு

புதுடில்லி:'இந்தியாவில் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகள் குறித்து கருத்து தெரிவிக்க, மற்றொரு நாட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை' என, மத்திய அரசு கூறியுள்ளது.

 சர்வதேச, மத, சுதந்திர ,அறிக்கை ,நிராகரித்தது ,மோடி,அரசு


சர்வதேச மத சுதந்திர ஆண்டு அறிக்கையை, அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், 'இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை. 'குறிப்பாக, சிறுபான்மையினரான

முஸ்லிம்கள், பசுக்களை கொன்றதாக அல்லது மாட்டிறைச்சி வைத்திருந்ததாக, ஹிந்து குழுக்களால் தாக்கப்படுவது அதிகம் நடந்துள்ளது' என,கூறப்பட்டுள்ளது.


இந்த அறிக்கை குறித்து, நம் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது: தன் மதச்சார்பற்ற நம்பகத்தன்மை குறித்து, இந்தியா பெருமைப்படுகிறது. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பல்வேறு சமூக மக்கள் வாழ்ந்தாலும், ஒற்றுமையாக சகிப்புத்தன்மையுடன் உள்ளோம் என்பதில்பெருமைப்படுகிறோம்.இங்கு, சிறுபான்மையினர் உட்பட அனைத்து மக்களுக்கும், இந்திய அரசியல் சாசனம் பல உரிமைகளை அளித்துள்ளது.



உலகில் மிகவும் வலுவான, உயிரோட்டமுள்ள

Advertisement

ஜனநாயகம் இங்கு உள்ளது. மத சுதந்திரத்தை, அரசியல் சாசனம் அளிக்கிறது. ஜனநாயக நிர்வாகம் மற்றும் சட்டத்தின்படி, அனைவரின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில், இது போன்ற அறிக்கையை வெளியிட, மற்றொரு நாட்டுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் கிடையாது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
24-ஜூன்-201921:57:24 IST Report Abuse

வல்வில் ஓரி நிக்காஹ் ஹலாலா என்றால் என்ன? எதிர்க்குரல் அல்லது சைல்ஸ் விளக்கவும்.

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
28-ஜூன்-201909:00:11 IST Report Abuse

எதிர்க்குரல் தெரியாதவனுக்கு சொல்லி புரிய வைக்கலாம் எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதது போல நடிப்பவனுக்கு என்ன சொல்லி புரிய வைக்க முடியும். ...

Rate this:
sankar - Nellai,இந்தியா
24-ஜூன்-201920:47:01 IST Report Abuse

sankarஒரு கிரேக்க கவிஞன் எழுதினான் - "கண்களை மூடி எங்களை கடவுளை வேண்ட சொன்னார்கள் - கண் விழித்து பார்த்தபோது, எங்கள் கைகளில் பைபிள் இருந்தது, அவர்கள் கைகளில் எங்கள் நாடு இருந்தது"-

Rate this:
24-ஜூன்-201914:53:52 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இவர்கள் சொல்லும் மத சுதந்திரம் என்பது நாம் நினைப்பது போல மக்கள் அவர்கள் விரும்பும் கடவுளை வழிபடுவது அல்ல , இந்து கடவுள்களை , இந்து கலாச்சாரத்தை இழிவுபடுத்த வேண்டும், இந்துக்கடவுள்கள் சாத்தான்கள் என்று சுதந்திரமாக கூவ வேண்டும் , காபிர்களை கொல்லவேண்டும் என்று பேச வேண்டும் , இந்துக்களின் வீட்டில் நுழைந்து மத திணிப்பு செய்ய வேண்டும் , மறுத்தால் போட்டு தள்ள வேண்டும் , இதெல்லாம் சுதந்திரமாக முன்பு நடந்தது , இன்று பிஜேபி ஆட்சியில் முடியவில்லை, இதைத்தான் வாடிகன் அடிகமைகள் சொல்லிக்காட்டுகிறார்கள்.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X