எடியூரப்பா முதல்வராவாரா?

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement

பெலகாவி:'' கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா ஆவாரா என்று பதிலளிக்க முடியாது. இது தொடர்பாக வரும் நாட்களில் அவரே பதிலளிப்பார்,'' என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி தெரிவித்தார்.மத்தியில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், கர்நாடகாவை சேர்ந்த அமைச்சர்கள் அடிக்கடி பேட்டியளித்து வருகின்றனர்.







பெலகாவியில் அமைச்சர் சுரேஷ் அங்கடி, நேற்று அளித்த பேட்டி:சட்டசபை இடைத்தேர்தல் விஷயத்தில் பா.ஜ., பயப்படவில்லை. காங்கிரஸ் அழிவு பாதையை நோக்கி செல்கிறது. எனவே, அக்கட்சியை பற்றி பேச விரும்பவில்லை.பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்ற நோக்கில், காங்கிரஸ் - ம.ஜ.த., கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டனவே தவிர, மாநில மக்களின் நன்மைக்காக அல்ல. மாநில பா.ஜ., தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, முதல்வராகும் விஷயத்தில் பதிலளிக்க முடியாது.






இது தொடர்பாக வரும் நாட்களில் அவரே பதிலளிப்பார்.பெலகாவியில் ரயில்வே தண்டவாளத்தில் டப்ளிங் பணி நடந்து வருகிறது. பூனாவிலிருந்து மீரஜ்; மீரஜிலிருந்து பெலகாவி; பெலகாவியிலிருந்து ஹூப்பள்ளி; ஹூப்பள்ளியிலிருந்து தாவணகரே வரை இரட்டை பாதைகள் அமைந்தால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்தால், பயணிகளுக்கு அனுகூலமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
24-ஜூன்-201903:54:08 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பிஜேபி தான் வந்துருக்கவேண்டும் இந்தவிஷயம் நாடறிஞ்ச உண்மை குர்ஸிமேல் காதல்கொள்ளடா என்று பிடிச்சுண்டு குணத்தினால் போதுமா ஆளத்தெரியவேண்டாமா ??????
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-201900:10:18 IST Report Abuse
Raghuraman Narayanan இந்த தடவை BJP நேர்மையாக தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற்று விடும். பின் பக்க கதவு வழியாக நுழைய நினைத்தால் மக்களிடம் கேட்ட பெயரை சந்திப்பது நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
23-ஜூன்-201921:58:56 IST Report Abuse
ஆப்பு சிறு சிறு வதந்திகளை சிஷ்யகோடிகளை விட்டு பரப்பி ஆழம் பார்ப்பது பெரிய தலைகளின் வழக்கம். ஜூனியர் அமைச்சர் சொல்லிக் குடுத்தபடி நல்லா செய்யுறாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X