பெலகாவி:'' கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா ஆவாரா என்று பதிலளிக்க முடியாது. இது தொடர்பாக வரும் நாட்களில் அவரே பதிலளிப்பார்,'' என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி தெரிவித்தார்.மத்தியில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், கர்நாடகாவை சேர்ந்த அமைச்சர்கள் அடிக்கடி பேட்டியளித்து வருகின்றனர்.

பெலகாவியில் அமைச்சர் சுரேஷ் அங்கடி, நேற்று அளித்த பேட்டி:சட்டசபை இடைத்தேர்தல் விஷயத்தில் பா.ஜ., பயப்படவில்லை. காங்கிரஸ் அழிவு பாதையை நோக்கி செல்கிறது. எனவே, அக்கட்சியை பற்றி பேச விரும்பவில்லை.பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்ற நோக்கில், காங்கிரஸ் - ம.ஜ.த., கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டனவே தவிர, மாநில மக்களின் நன்மைக்காக அல்ல. மாநில பா.ஜ., தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, முதல்வராகும் விஷயத்தில் பதிலளிக்க முடியாது.

இது தொடர்பாக வரும் நாட்களில் அவரே பதிலளிப்பார்.பெலகாவியில் ரயில்வே தண்டவாளத்தில் டப்ளிங் பணி நடந்து வருகிறது. பூனாவிலிருந்து மீரஜ்; மீரஜிலிருந்து பெலகாவி; பெலகாவியிலிருந்து ஹூப்பள்ளி; ஹூப்பள்ளியிலிருந்து தாவணகரே வரை இரட்டை பாதைகள் அமைந்தால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்தால், பயணிகளுக்கு அனுகூலமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE