பதிவு செய்த நாள் :
உறுதி!
காங்., தலைவர் பதவி ராஜினாமா செய்கிறார் ராகுல்
புதிய தலைவராக அசோக் கெலாட்டுக்கு வாய்ப்பு

புதுடில்லி:லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில், ராகுல் உறுதியாக உள்ளார்.இதனால், கட்சியின் புதிய தலைவ ராக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்படஅதிக வாய்ப்பு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, 2017 டிசம்பரில், கட்சியின் தலைவர் பொறுப்பை, ராகுல் ஏற்றார்.இது, காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.ஆனாலும், அதற்கு பின் நடந்த, சில மாநில சட்டசபை தேர்தல்களில், காங்கிரசால், பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், அதை, பெரிய வெற்றியாக, காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாட முடியவில்லை. நுாலிழை அளவில் தான், இந்த மாநிலங்களில், பா.ஜ., வெற்றி வாய்ப்பை இழந்தது.


இந்த மாநிலங்களில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற நிலையே உள்ளது.இந்நிலையில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல், காங்.,க்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. வெறும், 52 தொகுதிகளில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது.கடந்த, 2014ல் நடந்த தேர்தலை விட, எட்டு தொகுதிகளில் கூடுதலாக வெற்றி கிடைத்தாலும், லோக்சபாவில், இந்த முறையும், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை, காங்கிரஸ் இழந்தது.

விமர்சனம்


இந்த தேர்தல் தோல்வி, ராகுலின் தலைமை

தொடர்பாக, கட்சிக்குள் கடும் விமர்சனத்தை எழுப்பியது.தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பீஹார், உத்தர பிரதேசம்,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த, காங்., தலைவர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்; இது, ராகுலுக்கு, மேலும் நெருக்கடியை கொடுத்தது.இதையடுத்து, தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ராகுல், அதிரடியாக அறிவித்தார்.

அவர் அறிவித்து, ஒரு மாதமாகி விட்டது.அவரை சமாதானப் படுத்த, கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்தனர். ஆனால், ராஜினாமா முடிவில், ராகுல், உறுதியாக உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதே நிலை தொடர்ந்தால், கட்சி பணிகள் பாதிக்கப்படும் என்பதால், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை, கட்சி மேலிடம் முடுக்கி விட்டுள்ளது.


காங்., வட்டாரங்கள் கூறியதாவது:


கட்சியில் உள்ள அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒருவரை, தலைவராக நியமிக்க வேண்டும் என, மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதன்படி, அனுபவம், திறமை அடிப் படையில், ராஜஸ்தான் முதல்வரான, அசோக் கெலாட், 68, தலைவராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.'ஒரு மாநிலத்தின் முதல்வ ராக இருப்பவரை, கட்சியின் தலைவராக நியமிப்பது சரியாக இருக்காது.'இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை, ஒருவருக்கே அளிப்பது சரியான நடைமுறை அல்ல' என, சிலர் கேள்வி எழுப்பினர்.


சமாதானம்


ஆனாலும், நவீன் பட்நாயக், மம்தாபானர்ஜி போன்றோர், அவர்களது கட்சியின் தலைவர் களாகவும், முதல்வர்களாகவும் செயல்படுவதை

Advertisement

சுட்டிக் காட்டி, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி துவங்கிஉள்ளது.மேலும், காங்கிரஸ் மேலிட தலைவர்களின் தீவிர விசுவாசி, கெலாட். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகி யோரின் நம்பிக்கையை பெற்றவர். இதனால், அவர், காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப் படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.


ராகுல் கோட்டை விட்ட காரியம்



அமேதியில் குடியேறுகிறார் ஸ்மிருதிஉத்தர பிரதேச மாநிலம், அமேதி லோக்சபா தொகுதி, காங்கிரஸ் தலைவர்களின் பாரம்பரிய தொகுதியாக கருதப்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, தலைவர் ராகுல் ஆகியோர், இந்த தொகுதியின், எம்.பி.,க்களாக பதவி வகித்து உள்ளனர். ஆனாலும், இவர்களுக்கு,அமேதியில் நிரந்தரவீடு எதுவும் இல்லை; அதில், அவர்கள்ஆர்வமும் காட்டவில்லை.



இந்நிலையில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுலை, மத்திய அமைச்சரான, பா.ஜ.,வைச் சேர்ந்த, ஸ்மிருதி இரானி வீழ்த்தினார். இதை அடுத்து,அமேதியில், கவுரிகன்ச் பகுதியில் நிலம் வாங்கியுள்ள ஸ்மிருதி, அங்கு வீடு கட்டி குடியேறப் போவதாக அறிவித்துள்ளார்.''இனி, அமேதியில் தான், என் நிரந்தர வீடு இருக்கும். அமேதி மக்களை எளிதாக அணுகுவதற்காக, இங்கு குடியேற முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.


இதற்கிடையே, நேற்று முன்தினம் அமேதிக்கு வந்த, ஸ்மிருதி இரானி, விபத்தில் காயம் அடைந்த ஒரு மூதாட்டியை, ஆம்புலன்ஸ் வரவழைத்து, அதில் ஏற்றி அனுப்பி வைத்தார். டாக்டர்களுக்கும் தகவல் தெரிவித்து, மூதாட்டியை கவனித்து பார்க்கும்படி அறிவுறுத்தினார்.


Advertisement

வாசகர் கருத்து (13+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
24-ஜூன்-201916:34:29 IST Report Abuse

Indhiyanஇப்போ போறமாதிரி போயிட்டு அப்புறம் மறுபடியும் வந்துடலாம். சும்மா ஸ்டன்ட்டுதான்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜூன்-201915:24:03 IST Report Abuse

Endrum Indianஅப்போ மண்ணு மோகன சிங்குக்கு வேலை வந்து விட்டது என்று சொல்லலாம். அவர் அசோக் கெலாட்டுக்கு அன்டோனியோ மைனோ/ராவுல் வின்சி/பிரியங்கா வதேரா சொல்லும் எல்லா சொல்லுக்கும் தலையாட்டும் பயிற்சிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். என்ன மண்ணு மோகன சிங் அப்படி தானே

Rate this:
JSS - Nassau,பெர்முடா
24-ஜூன்-201917:48:05 IST Report Abuse

JSSமன்மோகன் சிங் காங்ரஸிற்கு, சோனியா காந்தி குடும்பத்திற்கு நல்ல தலைவராக செயல் படுவார் என்பது எனது நம்பிக்கை. ...

Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
24-ஜூன்-201914:20:06 IST Report Abuse

Sridhar Rengarajanநாடு சுதந்திரம் அடைந்ததும் காங்கிரசை கலைத்துவிடவேண்டும். அதை வைத்து யாரும் பிழைப்பு நடத்த கூடாது என்றார் மஹாத்மா காந்தி. ஆனால் மகாத்மாவின் வார்த்தைகளை யாரும் மதிக்கவில்லை. இப்போது காந்தியின் உத்தரவை செயல்படுத்தியே தீர வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு சாதித்து காட்டிக்கொண்டு இருக்கிறார் ராகுல்காந்தி.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X