தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது பாக்.,

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
லார்ட்ஸ்: உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி, 49 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, 'பேட்டிங்' தேர்வு

லார்ட்ஸ்: உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி, 49 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.



latest tamil news




இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (44), இமாம்-உல்-ஹக் (44) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய பாபர் ஆஸம் (69) அரைசதம் கடந்தார். முகமது ஹபீஸ் (20) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஹாரிஸ் சோகைல், 38 பந்தில் அரைசதமடித்தார். இவர், 89 ரன்னில் ஆட்டமிழந்தார். இமாத் வாசிம் (23) சோபிக்கவில்லை. வகாப் ரியாஸ் (4) ஏமாற்றினார்.


latest tamil news





டுபிளசி அரைசதம்


பாகிஸ்தான் அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்தது. ஷதாப் கான் (1), கேப்டன் சர்பராஸ் அகமது (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் லுங்கிடி 3 விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (2) ஏமாற்றினார். குயின்டன் (47) அரைசத வாய்ப்பை இழந்தார். மார்க்ரம் (7) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் டுபிளசி (63), அரைசதம் கடந்தார். வான் டெர் துசென் (36), டேவிட் மில்லர் (31) ஓரளவு ஆறுதல் தந்தனர். வகாப் ரியாஸ் பந்தில் கிறிஸ் மோரிஸ் (16), ரபாடா (3), லுங்கிடி (1) போல்டாகினர்.தென் ஆப்ரிக்க அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

பெலுக்வாயோ (46), தாகிர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் வகாப் ரியாஸ், ஷதாப் கான் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து தென் ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பரிதாபமாக இழந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-ஜூன்-201906:40:55 IST Report Abuse
Cheran Perumal பைனலில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவது என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ சி சி க்கு பெரும் லாபம் கிடைக்கும், விளையாட்டாளர்களுக்கும் அதில் பங்கு கிடைக்கும், மக்களுக்கும் பொழுது போகும்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
24-ஜூன்-201909:31:07 IST Report Abuse
Sanny வீண்கனவு, இது ஒன்னும் IPL அல்ல, 400 கோடி பேரம் பேச, அப்படியானால் மற்ற டீம் எல்லாம் இலிச்சவாயன்கள,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X