அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக, அமைச்சர்களின், 71 ,அறிவிப்புகள்,வெத்துவேட்டு!

தமிழகத்தில், 2018 - 19ம் நிதி ஆண்டில், அமைச்சர்கள் வெளியிட்ட, 71 அறிவிப்புகள், நடைமுறைக்கு வராமல், 'வெத்து வேட்டு' நிலைக்கு சென்றுள்ளன என்பது, தலைமை செயலரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்யோசனையின்றி, சாத்தியமில்லாத அறிவிப்புகளை வெளியிட்டதால், அவற்றை செயல்படுத்த முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டசபையில் கவர்னர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கை விவாதம் என, பல்வேறு நிலைகளில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த வகையில், தமிழக சட்டசபையில், 2018 - 19ம் நிதி ஆண்டில், மானிய கோரிக்கை விவாதங்களின் போது, அமைச்சர்கள், தங்கள் துறை சார்ந்த, 100க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர்.

மகிழ்ச்சி
அப்போதைய கோரிக்கைகளை தீர்க்கும் வகையில், அந்த அறிவிப்புகள் இருந்ததால், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். நம் கோரிக்கைகளின் தீர்வாக, அமைச்சர்கள், அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர் என, திருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், அமைச்சர்களின் அறிவிப்புகளை அமல்படுத்துவதில், தற்போதைய நிலவரம் குறித்து, அந்தந்த துறை செயலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதுபோல, ஒட்டுமொத்த அளவில்,

புதிய அறிவிப்புகளின் நிலை அறிவிப்புகளின் நிலை குறித்து, துறை வாரியாக விசாரித்தார். அப்போது, 14 அறிவிப்புகளை மட்டுமே, செயல்படுத்த முடியும் என்ற அளவில், அந்த அறிவிப்புகள் மீதான முன்னேற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அறிவிப்புகள்

மேலும் சில, அறிவிப்புகள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர்களின், 71 துறைரீதியிலான அறிவிப்புகளின் நிலை குறித்த தகவல்கள், தலைமை செயலருக்கு முறையாக கிடைக்கவில்லை.அவசர கதியில் அமைச்சர்கள் அறிவித்த அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த, எந்த நடவடிக்கையும், துறைரீதியாக எடுக்கப்பட வில்லை என்பது, அந்த ஆய்வில் தெரிய வந்தது.

எனவே, 2019 - 20ம் நிதி ஆண்டுக்கான புதிய அறிவிப்புகளை,இறுதி செய்ய வேண்டிய நிலையில், முந்தைய நிதியாண்டின், 71 அறிவிப்புகள் நிலை குறித்து, தெளிவான முடிவுஎடுக்க, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு

உள்ளனர்.அமைச்சர்கள் வெளியிட்ட அந்த, 71 அறிவிப்புகளை செயல்படுத்த முடியுமா அல்லது கைவிடுவதா என்பதை ஆராய்ந்து முடிவெடுத்து, கோப்புகளை முடிக்க, அரசு செயலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர், இ.பி.எஸ்.,சிடம் உள்ள, பொதுப்பணித்துறை உட்பட, பல்வேறு துறைகள் அறிவித்த திட்டங்களில் சில, செயல்படுத்தப்படாமல் முடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.அதுபோல, பொது சுகாதாரம், வேளாண், கல்வித்துறை போன்ற பல துறைகளின் அறிவிப்புகள், ஓராண்டாக முடங்கிக் கிடக்கின்றன.
சிக்கல் ஏன்?

சட்டசபையில் அறிவிப்பதற்கு முன், அந்தந்த துறை அதிகாரிகளிடம் இருந்து, புதிய திட்டங் களுக்கான பரிந்துரைகள் பெறப்படும். இந்த பரிந்துரைகள் திட்டமாக செயல்படுத்த சாத்திய மானதா என்பது குறித்து, அமைச்சர்கள், முன் யோசனையுடன் ஆய்வுசெய்வதில்லை. அவ்வாறு, முறையான விவாதங்கள் நடத்தி, முடிவு செய்யாமல், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்; சிறப்பாக

செயல்படுவது போல காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, திட்டங்களை அறிவித்து விடுகின்றனர்.

இதுபோன்ற, பொத்தாம் பொதுவான அறிவிப்புகள் தான், செயல்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளன. இது, அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.இன்று அமைச்சரவை கூட்டம்துறை வாரியான மானியக் கோரிக்கை குறித்து, விவாதிப்பதற்காக, தமிழக சட்டசபை, வரும், 28ம் தேதி கூடுகிறது. ஒவ்வொரு நாளும், மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பின், துறை அமைச்சர்கள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவர்.

புதிய திட்டங்களை இறுதி செய்வதற்காக, முதல்வர், இ.பி.எஸ்., தலைமையில், தலைமை செயலகத்தில் இன்று, அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது.இதில், சட்டசபையில் அறிவிக்க வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து, விவாதிக்கப்பட உள்ளது. பல்வேறு, புதிய தொழிற்சாலை களுக்கு, அனுமதி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே அறிவித்து, நடைமுறைக்கு வராத, முன்னேற்றம் இன்றி, முடங்கியுள்ள திட்ட அறிவிப்புகளின் கதி குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது.உள்ளாட்சி தேர்தல் நெருங்குவ தால், அதற்கு முன் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், எதிர்கட்சியினரை சமாளிப்பது குறித்தும், விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-ஜூன்-201921:40:18 IST Report Abuse

Anantharaman Srinivasanகவர்னர் உரையில் இடம்பெற்ற திட்டங்களே பயன்பாட்டுக்கு வரவில்லை என்னும்போது, எழுதிக்கொடுத்ததை படிப்பதற்கு ஒரு கவர்னர் எதற்கு? மாநில அரசை கேட்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லையா?? புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஒவ்வொரு இலக்காவிலும் புகுந்து குடைகிறாரே? சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறதே. இதில் கவர்னர் ஆலோசனை சொன்னால் என்ன.

Rate this:
karutthu - nainital,இந்தியா
24-ஜூன்-201916:23:45 IST Report Abuse

karutthuஆளுங்கட்சியின் மீதுள்ள வெறுப்பைக்காட்ட சிலவிஷமிகள் ஊடகத்தின் மூலமாக பிரச்சனையை கிளப்பி மக்களை குழப்பி ஆட்சியை கவிழ்க்க இது ஒரு வகையான சதி

Rate this:
P.Rengaraj - Madurai,இந்தியா
24-ஜூன்-201912:14:04 IST Report Abuse

P.Rengarajபொதுவாக கம்பெனிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அது போட்டி கம்பெனிகளின் ஷேர் மார்க்கெட்டை பாதிக்கும். அதையே போன்று அறிவிப்பு என்று ஒன்றை ஒரு மந்திரி சட்டசபையில் வெளியிடுகிறார் என்றால் அதற்கு எத்தனையோ விளைவுகள் இருக்கும். மந்திரி சொன்னால் அதுவும் சட்டசபையில் சொன்னால் அது அரசாணைக்கு வழிவகுக்கும். சில சமயம் அது சட்ட சிக்கலை உண்டுபண்ணும். பலசமயம் எதிர்கட்சிகளின் தீவிர பிரச்சாரத்தினால் ஆட்சிக்கும் பாதிப்பை அல்லது பின்னடைவை ஏற்படுத்தும். எனவே மிக்க கவனத்துடன் ஆட்சியாளர்கள் அறிவிப்பை அணுக வேண்டும். இது மக்களை ஏமாற்றுதற்க்காக ஏதோ வாய் புளித்ததோ அல்லது மாங்காய் புளித்ததோ என்று பேசுவதாக ஆகிவிடக்கூடாது.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X