பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

டில்லியில், நாளை நடக்க உள்ள, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க, கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி, தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்த
உள்ளனர்.

காவிரி, மேலாண்மை, ஆணைய கூட்டம்,தமிழகத்திற்கு,தண்ணீர், கிடைக்குமா?


'தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுதோறும், ஜூனில் நீர் வழங்கும் தவணை காலம் துவங்கும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.அந்த வகையில், இம்மாதம், 9.19 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.டில்லியில், மே மாதம் நடந்த, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை, 2 டி.எம்.சி., மட்டுமே, தமிழக எல்லைக்கு வந்துள்ளது. கர்நாடக

அரசு முறைப்படி நீரை வழங்காததால், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிதாகியுள்ளது.


பருவமழை


இந்நிலையில், கடந்த, 21ம் தேதி, காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக எல்லைக்கு, 2 டி.எம்.சி.,க் கும் குறைவான நீர் வந்துள்ளது, கர்நாடகாவில், பருவமழை குறைவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து ஆராயப்பட்டன.இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், டில்லியில், நாளை நடக்க உள்ளது.

Advertisement

இக்கூட்டத்தில் பங்கேற்க, பொதுப்பணித்துறை செயலர், பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், ராமமூர்த்தி ஆகியோர், இன்று டில்லி செல்கின்றனர்.


அதிகாரிகள் குழு


இருவருக்கும் சட்ட ரீதியான உதவிகளை வழங்குவதற்காக, காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர், சுப்பிரமணியம், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவும் டில்லி செல்கிறது.நாளைய ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய நீரை முறையாக வழங்க, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, அதிகாரி கள் கோரிக்கை விடுக்க உள்ளனர். மேலும், நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும், தமிழக பிரதிநிதிகள் எடுப்பர் என, தெரிகிறது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
24-ஜூன்-201910:34:07 IST Report Abuse

svsஎல்லா அரசியல் கட்சியையும் ஒரு முறை நல்லா திட்டி தீருங்க .....ஆனால் இதெல்லாம் நாம் இங்கு செய்ய வேண்டியதுக்கு தடை இல்லையே ??.....மணல் கொள்ளை இன்னும் ஏன் தொடருது ??.......தமிழ் நாட்டில் கூடத்தான் சிறு தானியம் பயிர் செய்யலாம் ..தண்ணீர் செலவுகுறையும் ......

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஜூன்-201907:43:27 IST Report Abuse

ஆரூர் ரங்இதனை வெறும் நீருக்கான விவகாரமாக மட்டுமே பார்க்கக்கூடாது .கடந்த இருபதாண்டுகளில் கர்நாடகத்தில் கரும்பு நெல் போன்ற அதிக நீருறிஞ்சும் பயிர்களை அதிக பரப்பளவில் பயிரிட்டுள்ளார்கள் .ரேஷனில் இலவசமாகவோ குறைந்தவிலையிலோ அரிசி கிடைப்பதால் கர்நாடக மக்கள் பெரும்பாலும் சிறு தானிய உணவிலிருந்து அரிசிக்கு மாறிவிட்டனர் . காவிரிப்பிரச்னை நிலுவையிலிருந்தபோதே கடந்த நாற்பதாண்டுகளில் கரும்பு பயிரிடுவது சர்க்கரை ஆலைகள் அமைப்பது போன்றவற்றில் கர்நாடகா மும்முரமாக இருந்தபோது நம் ஆட்கள் உறங்கிவிட்டனர்.கோர்ட்டும் தடுக்கவில்லை . பணப்பயிருக்காக நீர்தேவை அதிகரித்தபின் இப்போது நீருக்காக போர்புரிவதில் அர்த்தமில்லை கூடுதல் நிலப்பரப்பில் இருமாநிலங்களிலும் அதிக பரப்பளவில் அதிக நீர் தேவைப்படும் ஒட்டு ரக வீரிய பயிர்களை பயிரிட்டதை கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லையெனத் தெரிகிறது பாசனப்பரப்பை அதிகரித்து புதிய நீர்நிலைகளை உருவாக்கிய கர்நாடகத்தையும் கோர்ட் எதனாலோ மன்னித்துவிட்டது . டெல்டா விவசாயிகளுக்கே நதிநீரில் அதிக உரிமை எனும் அனைத்துலகக் கோட்பாட்டையே மறந்து தீர்ப்பளித்துள்ளது முந்தைய தீர்ப்புகளை அமல்படுத்தாததற்காக தமிழகத்துக்கு நஷ்டயீடும் தரவில்லை போதாததற்கு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குபோய்க்கொண்டிருக்கும் நிலையில் அதனை தமிழகம் அதிகம் எடுத்து பயன்படுத்தவும் தீர்ப்பு கூறியுள்ளது .இத்தனை கோளாறுகள் இருந்தாலும் இன்னும் இருபதாண்டுகளுக்கு கோர்ட் தீர்ப்பை மாற்றவே முடியாது . பல மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிநீருக்காக தனி ஆணையத்தை மத்திய அரசு அமைப்பதை எந்த மாநிலமும் ஏற்பதாகத்தெரியவில்லை .நதிநீர் பகிர்மானத்துக்கான தேசீயக்கொள்கை என இதுவரை முழுமையாக எதுவுமில்லை . நம் மாநிலத்தில் பெய்யவும் மழையை சிக்கனமாக சிறந்தமுறையில் பயன்படுத்துவதும் நீர் உறிஞ்சும் பயிர் விவசாயத்துக்கு பெருமளவு விடை கொடுப்பதுமே உடனடித்தீர்வு

Rate this:
Raj - coimbatore,இந்தியா
24-ஜூன்-201909:34:28 IST Report Abuse

Rajஅவர்கள் மக்களுக்கு வேலை செய்கிறார்கள்...நம்ம ஊர் அரசியல் வியாதிகள் மோடி எங்கள் டாடி ...லேடி நீ போடி...என்று கூறியதை அனைவரும் அறிவார்கள். அங்கேயும் ஊழல் உண்டு ..பெங்களூரு நகரத்துக்கு நீர் எங்கிருந்து கிடைக்கிறது? இப்போது மக்கள் என்ன போராடினாலும் ஒன்றும் நடக்காது. தேர்தல் முடிந்து விட்டது. மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கை செலுத்தியுள்ளனர். இப்போதாவது மாண்டியாவிலிருந்து நல்ல செய்தி வருமா? திருநாவுக்கரசர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? காங்கிரஸ் தலைமை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தி மு க தலைவர் என்ன செய்திருக்கிறார்? கமல் பெங்களூரு சென்று பேசியபோது எள்ளி நகைத்தவர்கள் ஏன் இப்போது மௌனமாக இருக்கிறார்கள்? ஒரு சுண்டு விரலாவது அசைத்ததாக தெரியவில்லையே? அறிக்கை விட்டு என்ன பலன். சண்டைக்காரனுடன் பேசி நடவடிக்கை எடுக்கலாமே? எல்லவற்றுக்கும் நீதி மன்றம் குறுக்கிடவேண்டுமென்றால் எதற்கு அரசியல் வாதிகள்? மக்கள் சிந்திப்பார்களா? ...

Rate this:
24-ஜூன்-201906:32:54 IST Report Abuse

ஆப்புடில்லி கூட்டத்துக்கு போற அதிகாரிங்க எல்லாம் திரும்பும் போது ஆளுக்கு 2 கேன் தண்ணி கொண்டாங்க....வெறுங்கையோடு திரும்பிட்டாங்க என்னும் பேர் வேண்டாம்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X