கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு கருதியே, 'சிமி'க்கு தடை

Added : ஜூன் 24, 2019
Share
Advertisement
 பாதுகாப்பு கருதியே, 'சிமி'க்கு தடை

குன்னுார்:''நாட்டின் பாதுகாப்பு கருதியே, 'சிமி' இயக்கத்தை தடை செய்வது தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது,'' என, மத்திய அரசு வழக்கறிஞர், பிங்கி ஆனந்த் கூறினார்.
நாட்டில் நாச செயல்களில் ஈடுபட்ட, இந்திய இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பு எனும், 'சிமி' இயக்கம், 2001ல், சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.குன்னுார்தடை நீட்டிப்பு தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாய விசாரணை, நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது.இரண்டாவது நாளான நேற்று, கர்நாடக மாநில புலனாய்வு பிரிவு, டி.ஐ.ஜி., ராஜேந்திர பிரசாத், பெங்களூரு நகர உதவி போலீஸ் கமிஷனர், முகமது சாஜத் கான், இன்ஸ்பெக்டர் பிரசாத்பாபு ஆகியோர், விசாரணையில் பங்கேற்று, கர்நாடகாவில் நடந்த வெடிகுண்டு விபத்து உட்பட, பயங்கரவாத செயல்கள் குறித்து, சாட்சியம் அளித்தனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான, டில்லி உயர் நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், பிங்கி ஆனந்த், நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் உட்பட, பல்வேறு பயங்கரவாத செயல்கள் குறித்து, அம்மாநில போலீஸ் அதிகாரிகள், மூன்று பேர் சாட்சியம் அளித்தனர்.இரண்டாவது நாளில், வேறு எந்த மனுக்களும் பெறப்படவில்லை. விசாரணைநாட்டின் பாதுகாப்பு கருதி, சிமி இயக்கத்தை தடை செய்வது தொடர்பான விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தீர்ப்பாய விசாரணை, இன்று நிறைவு பெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X