அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரைக்கு பெரியாறு அணை நீர்

Added : ஜூன் 24, 2019
Advertisement

தேனி : பெரியாறு அணை நீரை மதுரை குடிநீருக்கு குழாய் மூலம் கொண்டு செல்லும் மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தில் ரூ. 1,200 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீரை நேரிடையாக குழாய் மூலம் கொண்டு செல்ல சில மாதங்களுக்கு முன் பூமி பூஜை நடந்தது. இதற்கு தேனி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தொடர முடியவில்லை.

தற்போது மதுரை வளர்ச்சிக்கு தட்டுப்பாடு இல்லாத குடிநீர் அவசியமாகிறது. எனவே மத்திய அரசின்' அம்ரூத்' திட்டத்தில் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் கொண்டு செல்ல ரூ.1,200 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாற்றில் நீர் வரத்து இல்லாத காலங்களில் விரைவில் குழாய் பதிக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் மதுரைக்கான திட்டத்தால் இந்த ஆற்றில் உள்ள 3 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 50 ஊராட்சி குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படுமோ என உள்ளாட்சி அமைப்புகளிடம் பீதி ஏற்பட்டுள்ளது. எனினும் ஆற்றில் வழக்கமாக திறக்கப்படும் நீர் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X