மதுரை:மதுரையை சேர்ந்த பெருமாள் தாத்தா 110வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் அவரை 'எவர்கிரீன் தாத்தா' என அழைக்கின்றனர்.
பெருமாள் தாத்தா கூறியதாவது:1910ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுபட்டியில் பிறந்தேன். 12 வயதில் மதுரைக்கு வந்து 1936ல் மெஜூரா கோட்ஸ் ஆலையில் சேர்ந்தேன். 1941ல் ராஜம்மாளை திருமணம் செய்தேன். தற்போது அவர் இல்லை. விலைமதிக்க முடியாத சொத்துக்களாக 11 குழந்தைகள் பிறந்தன.தற்போது ஐந்து பிள்ளைகள், 13 பேரன்கள் என்னை சிறிய குழந்தை போல் பாசம் காட்டி கவனிக்கின்றனர். அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து 'வாக்கிங்' செல்கிறேன்.
உணவில் பெரிதாக கட்டுப்பாடுகள் இல்லை. உட்கார்ந்து எந்திரிக்கத்தான் உடல் கொஞ்சம் ஒத்துழைக்க மறுக்கிறது. மனம் இளமையாகத்தான் இருக்கிறது. மகன், மகள், பேரன், பேத்திகளுடன் இதே போல் அடுத்த ஆண்டு 111வது பிறந்தாள் கொண்டாடுவேன்.இவ்வாறு ஆனந்தகண்ணீர் பொங்க 'கேக்' சாப்பிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE