பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியை துார் வாரிய இளைஞர்கள்

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ஏரியை துார் வாரிய இளைஞர்கள்

தர்மபுரி:தனியார் அறக்கட்டளை நிதியுதவி மற்றும் கிராம இளைஞர்கள் உதவியோடு, தர்மபுரி அருகே, ஏரியை துார் வாரி, கிராம மக்கள் அசத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கடும் வறட்சியால், பல ஆண்டுகள் வளர்த்த தென்னை, பாக்கு, மா உள்ளிட்டவை காய்ந்து வருகின்றன. பெரும்பாலான ஏரி, குளம், அணைகளில் நீரின்றி, நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, தேவையான முன்னேற்பாடுகளை செய்ய, அரசு தவறி வருவதாக, மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் பஞ்சாயத்து, செக்காரப்பட்டி கிராம மக்கள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன நிதியுதவியுடன், அங்குள்ள கசிவுநீர் குட்டையை துார் வாரி, மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.கிராம மக்கள் கூறியதாவது:தொப்பூர் ஊராட்சியில், மூன்று புறம் மலைகளால் சூழப்பட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மலையிலிருந்து வரும் நீரை சேமிக்க, ஒரு பகுதியில் தொப்பையாறு அணை கட்டப்பட்டு உள்ளது.அதன் மறுபுறம் உள்ள மலையிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க, கோம்பைக்காட்டில், 15 ஏக்கரில் ஓபுல்ராயன் கசிவு குட்டை அமைத்த வனத்துறையினர், தொடர்ந்து பராமரிக்கவில்லை. இதனால், பருவ மழையின் போது, மழை நீரை தேக்க, கிராம இளைஞர்களுடன் இணைந்து, துார் வாரும் பணியை துவங்கினோம்.சென்னையில் உள்ள, 'பகிர்வு' தொண்டு நிறுவனத்தினர், இங்கு ஆய்வு செய்து, பெங்களூரில் உள்ள, 'சேட்ரிஸ்ட்' அறக்கட்டளையில் நிதி பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தனர்.
எங்கள் பகுதி மக்களின், 1 லட்சம் ரூபாய் மற்றும் உடல் உழைப்பு, சேட்ரிஸ்ட் அறக்கட்டளை வழங்கிய, 10 லட்சம் ரூபாயுடன் பணி நடந்தது.கசிவுநீர் குட்டையில் இருந்த கருவேல மரங்களை அகற்றி, கரையின் அளவை, 3 அடி உயர்த்தி, அகலப்படுத்தப்பட்டது. இங்குள்ள தடுப்பணையை பலப்படுத்தி, 2 அடி உயர்த்தி உள்ளோம். இங்கு, தண்ணீர் தேங்கும் காலங்களில், அதிகளவில் பறவைகள் வரும் என்பதால், நாவல், கொய்யா உட்பட, 500 மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-201911:26:37 IST Report Abuse
ருத்ரா தங்கள் பத்திரிகை மூலம் தினம் தினம் தன்னம்பிக்கை இளைஞர்களின் பளிச்சென்று ஆகும் நீர்ததேக்கங்களையும் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பெருமையுடன் பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
NAGHARAJAN S N - chennai,இந்தியா
24-ஜூன்-201906:36:52 IST Report Abuse
NAGHARAJAN S N தினமலரின் நமக்கு நாமே திட்டம் தினம் தினம் இது போன்ற நீர்நிலை பணிகள் துவக்க ஊக்கமளித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை வெளிப்பாடு என்பதை மறக்க முடியாது. தர்மபுரி மாவட்டம், தொப்பூர் பஞ்சாயத்து, செக்காரப்பட்டி கிராம மக்கள், அப்பகுதி இளைஞர்கள் கசிவுநீர் குட்டையை தூர்வாரிய பணி பாராட்டத்தக்கது. கிராம மக்களுக்கு நன்றிகள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X