நிரந்தர அதிபராக தொடர சிறிசேன திட்டம்?

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (7)
Advertisement

கொழும்பு : 'இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின், ௧௯-ஏ பிரிவை, ரத்து செய்ய வேண்டும்' என, அதிபர், மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அந்நாட்டின் நிரந்தர அதிபராக தொடர, அவர் விரும்புவது தெரிய வந்துள்ளது.






இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே, 2010ல், அரசியல் சட்டத்தின், ௧௮-ஏ பிரிவை ஏற்படுத்தினார். அதன்படி, அதிபராக இருப்பவர்கள், எத்தனை முறை வேண்டுமானாலும், தேர்தலில் போட்டியிடலாம் என, சட்டத்தை ஏற்படுத்தினார். ஆனால், 2015ல், அதிபராக இருந்த சிறிசேன, 19-ஏ என்ற, அரசியல் சட்டப்பிரிவை ஏற்படுத்தி, முன்னாள் அதிபர், ராஜபக்சே கொண்டு வந்த, 18-ஏ பிரிவை நீக்கினார்.

அதன்படி, அதிபராக இருப்பவர்கள், இரண்டு முறை மட்டும் தான், தேர்தலில் போட்டியிட முடியும்; மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என, சட்டம் கொண்டு வந்தார். இந்நிலையில், தான் கொண்டு வந்த, 19-ஏ அரசியல் சட்ட பிரிவை, ரத்து செய்ய, அதிபர் விரும்புகிறார். இதன் மூலம், இலங்கையின் அதிபராக, பல காலம் தொடர அவர் விரும்பு வது, வெளிப்பட்டுள்ளது.




அதிபர் பதவியிலிருந்து வெளியேற விரும் பாத சிறிசேன, நேற்று, ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது: நாம் பதவிக்கு வந்து, நான்காண்டுகள் ஆகியுள்ள நிலையில், நாம் செய்த தவறை, மறுபடியும் ஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நம் ஆட்சி, இன்னும், நான்கு மாதங்களில் முடிய போகிறது; புதிதாக தேர்தல் வரவுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை, அரசியல் சட்டம், 19-ஏ பிரிவை ரத்து செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. நாம் செய்த மிகப் பெரிய தவறு, 19-ஏ பிரிவை அறிமுகப்படுத்தியது தான். அதனால் தான், இந்நாட்டில், அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது. இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நான் ஒரு பக்கம் இழுப்பதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மறுபுறம் இழுப்பதாகவும், மக்கள் கருதுகின்றனர். இவ்வாறு, அதிபர் சிறிசேன பேசினார்.






பிரதமர் ரணிலுக்கு எதிர்ப்பு


தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், சில மாதங்களுக்கு முன், அவரின் பதவியை, அதிபர் சிறிசேன, திடீரென பறித்தார். எனினும், ரணில் விட்டுக் கொடுக்காமல், சட்டப்படி போராடினார். இரண்டு மாதங்கள், பிரதமர் இல்லாமலேயே, அந்நாடு இயங்கியது. அந்நாட்டின் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, மீண்டும் பிரதமரானார் ரணில். இதனால், ராஜபக்சேவை, பிரதமர் பதவியில் அமர்த்த நினைத்த, சிறிசேனவின் முயற்சி தோல்வி அடைந்தது.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கிட்டப்பன் - Djibouti,டிஜிபௌசி
24-ஜூன்-201909:09:30 IST Report Abuse
கிட்டப்பன் ஆசிய கண்டத்துக்கு நேரமே சரியில்லை போல.
Rate this:
Share this comment
Cancel
24-ஜூன்-201908:59:37 IST Report Abuse
தமிழ் குடி மகன் நிரந்தரமாக சப்பைகளுக்கு (சீனர்களுக்கு) அடிமை தாண்டா நீங்க...
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
24-ஜூன்-201908:52:45 IST Report Abuse
Gnanam ஜனநாயகத்திற்கு புறம்பான எதிர்பார்ப்பு. இந்த நாற்காலி அப்படிப்பட்ட ஓன்று, அமர்ந்தால் எழும்ப மனம் வராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X