சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாண்டிலில் சிக்கிய திமிங்கல சுறா

Added : ஜூன் 24, 2019
Advertisement

பழவேற்காடு: கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில், திமிங்கல சுறா சிக்கியதால், மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.பழவேற்காடு, சிவன்கோவில் குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று அதிகாலை, கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஆந்திர கடற்பகுதியில், மீன்களை பிடிக்க துாண்டில் போட்டனர். சிறிது நேரத்தில், துாண்டில் வேகமாக உள்ளே செல்வதை கண்டனர்.கயிற்றுடன் சேர்ந்துள்ள துாண்டிலை வெளியே எடுக்க முயற்சிக்கும்போது, இழுக்க முடியவில்லை. பெரிய அளவு மீன் சிக்கியிருப்பதை அறிந்தனர். படகில் ஏற்ற முடியாத நிலையில், துாண்டிலுடன் இழுத்தபடி சிக்கிய மீனுடன் கரை திரும்பினர்.சக மீனவர்கள் உதவியுடன் துாண்டிலை தண்ணீரில் இருந்து கரைக்கு இழுத்தபோது, 500 கிலோ எடை கொண்ட திமிங்கல சுறா சிக்கியிருப்பதை கண்டனர். அதை துண்டு துண்டாக வெட்டி எடுத்து விற்பனைக்காக சென்னைக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X