சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எரியாத மின் விளக்கால் இருளில் சாலை

Added : ஜூன் 24, 2019
Advertisement

எம்.ஜி.ஆர்., நகர் : அண்ணா பிரதான சாலையில், எரியாத மின் விளக்குகளால், அச்சாலை இருள் சூழ்ந்து காட்சியளிப்பதுடன், வழிப்பறி சம்பவங்கள் நடக்கும் நிலை உருவாகி உள்ளது.எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா பிரதான சாலை, நெசப்பாக்கம் -- அசோக் நகரை இணைக்கும், முக்கிய சாலையாக உள்ளது.

இச்சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு சில நாட்களாக, மின் விளக்குகள் எரியவில்லை. இதனால், இருள் மூழ்கி காட்சியளிக்கிறது. மேலும், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சாலையோரம் நிறுத்தப்படும், லாரிகள் மற்றும் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

மின் விளக்கு எரியாதது, ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பின்னடைவாக உள்ளது. இதனால், மின் விளக்குகளை சீர்செய்ய, மாநகராட்சி முன் வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X