சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போராட தயாராகுது ஆசிரியர் கூட்டணி

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement
போராட தயாராகுது ஆசிரியர் கூட்டணி

மதுரை: ''அரசுப் பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அவர் கூறியதாவது: ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு கூட்டம், ஜூன், 30ல் சென்னையில் நடக்கிறது. அரசு வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றோம். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை, ரத்து செய்யப்பட்டது. அதேபோல், தற்போதைய அரசும், பேச்சு நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

அரசு பள்ளிகளில், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மதுரை மாவட்டத்தில், அரசு பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்காமல் உள்ளனர். இவற்றை சரி செய்ய வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூன்-201905:03:21 IST Report Abuse
meenakshisundaram எதுக்கு ?குளம் தூர் வாரவா? பேசாமே கடப்பாரையை எடுத்துக்கிட்டு குளம் வெட்டினாலாவது மக்கள் ஆதரவு இருக்கும் ,தண்ணி இல்லாம அவனவன் கஷ்டப்படும்போது இப்படி கிளம்பாதீங்க, மாநிலத்தின் ஏதாவது ஒரு ஊரிலாவது உங்க பெயர் சொல்றமாதிரி ஒரு குளத்தை வெட்டுங்க ,புண்ணியமா போகும், அடுத்தது நீருக்காக போராட தமிழன் முன் வர வேண்டும் 'நீட்'ட்டுக்காக அல்ல.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-ஜூன்-201911:13:11 IST Report Abuse
A.George Alphonse Why this JACTTO- GEO are doing their porattams only at the time of Schools reopenings and Public Exams Answers Sheets Valuations time.The government should scrap or abolish such Unions in order to avoid such unnecessary porattams by these teachers in our state in coming days.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24-ஜூன்-201910:26:16 IST Report Abuse
தமிழ் மைந்தன் போராட்டம் வேண்டாம் என சொன்னபோது தொடரும் என்று சொன்னீர்கள் .........இட மாறுதல் என்றவுடன் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேறுவழியின்றி நீங்கள் வாபஸ் என அறிவித்தீர்கள்......இந்த காமெடி எங்களுக்கும் தெரியும்......அதெப்படி உங்க ஊழல்தலைவர் மகன் போலவே காமெடி செய்யறீங்க........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X