சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்

Added : ஜூன் 24, 2019
Advertisement

- நமது நிருபர் -மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு, நில உடைமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதையில், மாதவரம் - சோழிங்கநல்லுார் வரை, 47 கி.மீ., பாதையில், 46 நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

இந்நிலையங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதையொட்டி, இப்பாதையில் உள்ள, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், மேடவாக்கம் காமராஜர் தோட்டம், பெரும்பாக்கம் மற்றும் குளோபல் மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான இடம் கையகப்படுத்த உள்ளது.நில உடைமையாளர்கள், 115 பேர் ஏரியாவுக்கான, வருவாய் கோட்ட அலுவலகத்தில் உள்ள நிலம் எடுப்பு அலுவலரை, உரிய ஆவணங்களுடன் நாடி, தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்க, முன்பே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, இப்பாதையில், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் மற்றும் நந்தம்பாக்கம் வர்த்தக மைய மெட்ரோ நிலையங்களுக்கு நிலம் கையகப்படுத்த, 46 பேருக்கு, தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.இவர்கள், ஏரியாக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலகத்தில் உள்ள நிலம் எடுப்பு அலுவலரை, உரிய ஆவணங்களுடன் நாடி, தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்க, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X