பொது செய்தி

இந்தியா

தங்கம் விலை ஏற்றம்: காரணம் என்ன?

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (8)
Advertisement

கோவை: சர்வதேச அரசியல் தாக்கமும், பொருளாதார மாற்றங்களுமே, தங்கம் விலை ஏற்றத்துக்கு காரணமாக அமைவதாக தகவல் வெளியாகியுள்ளது.






தங்கம் மீதான மோகம் அதிகம் உள்ளதால், உலகளவில், தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது. தங்கம் விலை உயர்ந்தாலும், மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர்.சமீப காலமாக, தங்கம் விலை, கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதற்கு, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களே காரணமாக அமைவதாக, தகவல் வெளியாகியுள்ளது.





மத்திய அரசின், 'மெட்டல்ஸ் மினரல்ஸ்' நிறுவனம் மற்றும் சுவிட்சர்லாந்து, 'பேம்ப்' நிறுவனத்தின், வர்த்தக கூட்டாளியான, கயிலை ராஜன் கூறியதாவது: தங்கம் விலை, இன்றும் அமெரிக்க டாலரில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரம் சரியில்லை என்பதை உணர்ந்த, பொருளாதார வல்லுனர்களும், முதலீட்டாளர்களும், பாதுகாப்பு கருதி, தங்கள் முதலீடுகளை, அமெரிக்க டாலர் மற்றும் மார்க்கெட்களில் இருந்து எடுத்து, பாதுகாப்பான தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கம் விலையில், ஏற்றம் ஏற்படுகிறது.





அமெரிக்கா - சீனா, அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக போரும், ஏற்றத்துக்கு ஒரு காரணம். அமெரிக்கா மோதும், இந்த இரண்டு நாடுகளும், மிகப் பெரிய பொருளாதார சந்தை. அமெரிக்கா - ஈரான் இடையேயான அரசியல் உஷ்ணமும், போர் பதற்றத்தை அதிகரித்து, விலையை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. அமெரிக்காவுடன், நம்முடைய ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம்; சீனாவுக்கு தலைகீழ் நிலைமை. ரஷ்யாவின் ஆதரவும் ஈரானுக்கு உள்ளதால், இங்கும் தீர்வு உடனே ஏற்படாது. இந்த அரசியல் சார்ந்த பொருளாதார பிரச்னைகள் அனைத்தும், உடனடியாக தீர்க்க கூடியதே. சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால், தங்கம் விலை, 100 சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
24-ஜூன்-201916:39:05 IST Report Abuse
Ramamoorthy P ஏற்கனவே கையிருப்பில் இருக்கும் தங்க நகைகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்துமா ?
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
24-ஜூன்-201915:00:27 IST Report Abuse
pattikkaattaan தங்க விலை இவ்வளவு அதிகமாகும் என்றுதான், தங்கம் என்று பெயர் வைத்து விட்டார்கள் நிறைய பேருக்கு .. ம்ம் அப்படியாவது சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
24-ஜூன்-201913:31:10 IST Report Abuse
mariyappangopinathan சாமானியன் இனிமே கல்யாணத்துக்கு தங்கம் வாங்ககூடாதுன்னு ஒரு எழுதப்படாத சட்டம் உருவாகிடுச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X