பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கவுன்சிலிங்கில் கவனிக்க வேண்டியது என்ன?

Added : ஜூன் 24, 2019
Advertisement

சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு ஆலோசனை வழங்கும், 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சியில், நேற்று, ஏராளமான மாணவர்கள், பெற்றோருடன் உற்சாகமாக பங்கேற்றனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்து உள்ளனர்.இதில், பொது பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த கவுன்சிலிங்கில், பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, விளக்கம் தரும் வகையில், நம் நாளிதழ் சார்பில், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.குன்றத்துார், சாரதி நகரில் உள்ள, 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவனத்தில், நேற்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, இந்த நிகழ்ச்சி நடந்தது.அம்பத்துாரில், வடக்கு பூங்கா தெருவில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா மஹாலில், நேற்று மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை நடந்தது.பொறியியலில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால், அதில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றிய குழப்பம் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்குப்பின், பொறியியல் துறை அடைந்திருக்கும் வளர்ச்சியைகல்வியாளர்கள் விளக்கினர்.

கல்லுாரிகளை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்தது.-பி.டி.ஹர்ஷினி, விவேகானந்தா நகர், அம்பத்துார்கவுன்சிலிங் குறித்து, எதுவுமே தெரியாமல் வந்த எனக்கு, பங்கேற்ற பின், விபரமாக தெரிந்து கொண்டேன். என், மகளை இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்க்கும் முன், இங்கு, தெரிந்து கொண்டதை நினைவு கூர்ந்து, கவனத்துடன் கல்லுாரியில் சேர்ப்பேன். பிற நாட்டு மொழிகளை கற்பதன் அவசியத்தை, இந்த நிகழ்ச்சி வழியே தெரிந்து கொண்டேன்.ஜே.சுபாஷ், கோவூர்.ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து, ஏகப்பட்ட குழப்பத்துடன், இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.

நிபுணர்களின் பேச்சு எனக்கு, தெளிவை தந்தது. எந்த கல்லுாரி என்பதை விட, அங்கு, என்னென்ன கட்டமைப்பு வசதிகள் உள்ளன. புதிதாக, மாணவர்களுக்கு என்ன கற்றுத் தருகின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும் என, உணர்ந்து கொண்டேன்.ஆர். ஞானவேலன்,மேடவாக்கம்தற்காலிக இன்ஜினியரிங் பட்டதாரிகளின் நிலை மற்றும் கல்லுாரிகளின் நிலை குறித்து, மிகத் தெளிவாக நிபுணர்கள் விளக்கினர். என் மகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் சேர்க்க, முடிவு செய்திருந்தேன்.

தற்போது, இ.சி.ஈ., அல்லது எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகளில், சேர்க்க முடிவு செய்துள்ளேன்.- ஒய். விஜயலட்சுமி, கோடம்பாக்கம்.விருப்பமான பாடத்தை கல்லுாரியில், எப்படி தேர்வு செய்ய வேண்டும் என, தெரிந்து கொண்டேன். இனி, பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை தெளிவாக தேர்வு செய்வேன். குறுகிய வட்டத்தில் இருந்த எனக்கு, இந்த நிகழ்ச்சியில், பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.எஸ்.பவித்ரா, போரூர்ஆன்லைன் கவுன்சிலிங் பதிவு செய்வது, எனக்கு பிடித்த கல்லுாரிகளை தேர்வு செய்வது குறித்து, அறிந்து கொண்டேன். கவுன்சிலிங் குறித்து, தெளிவான தகவல் கிடைத்தது. படிப்பை தேர்வு செய்வது முதல், எல்லாவற்றிலும், கவனம் செலுத்த வேண்டும் என்ற, எச்சரிக்கை உணர்வு எழுந்துள்ளது.

ஜே.எஸ். தாரணி, கோவூர்நான் பிளஸ் 1 படிக்கிறேன். ஆனாலும் பிளஸ் 2விற்கு பின், என்ன படிக்க வேண்டும் என்ற யோசனை இப்போதே வந்துவிட்டது. அதனால், பொறியியலை தேர்வு செய்யலாமா என்ற கேள்வியுடன் வந்தேன். பொதுவாக பொறியியல் படித்தோருக்கு, வேலை கிடைக்காது என்ற கருத்து உள்ளது. ஆனால், திறமை இல்லா திண்டாட்டம் தான் உள்ளது என்ற உண்மை இப்போது புரிந்தது.- கே.ஜெயப்பிரகாஷ்,அம்பத்துார்கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டில், ஏதேனும் ஒன்றில் சேர, முடிவு செய்திருந்தேன். நிகழ்ச்சியில், எலக்ட்ரிக்கல் மற்றும் இ.சி.இ., பாடப்பிரிவுகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து, விரிவாக எடுத்துரைத்தனர்.

அதனால், எலக்ட்ரிக்கல் படிப்பை எடுக்க முடிவு செய்துள்ளேன்.ஒய்.ஸ்ரீலேகா, கோடம்பாக்கம் பொறியியல் துறையின் அபரிமிதமான வளர்ச்சியை, 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சி கண்முன்னே எடுத்துக் காட்டியுள்ளது. வணிகவியல் பாடப்பிரிவு, பொறியியல் துறையில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்பதை, கல்வியாளர்கள் விளக்கியது, பயனுள்ளதாக இருந்தது.-ஆர்.எஸ்.சுவேதா, பட்டாபிராம்பெற்றோர் பேட்டிமாணவ - மாணவியர் பேட்டிதெளிவாக முடிவெடுங்கள்!

இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் விதிகள் குறித்து, காரைக்குடி, அழகப்பா செட்டியார் அரசு கல்லுாரி பேராசிரியர், கே.பாஸ்கரன் பேசியதாவது:பள்ளி படிப்பை பொறுத்தவரை, ஒரே மாதிரியான பாடப் பிரிவுகள் தான். அதை, மனப்பாடம் செய்து, மாணவர்கள் படித்து விடுவர். இன்ஜினியரிங் படிப்பில், நிறைய மாற்றங்கள் உள்ளன. அதை, சரியாக கற்க வேண்டும். படிப்பது மட்டுமின்றி, படித்த பின், அதை எங்கு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என, மாணவர்கள் தெளிவாக சிந்தித்து, முடிவெடுக்க வேண்டும்.மருத்துவம் கிடைக்கவில்லை என, இன்ஜினியரிங் படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள், இந்த துறையில் உள்ள, மருத்துவம் சார்ந்து, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும் தெரிந்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.மனிதனுக்கும், இயந்திரத்துக்குமான போட்டி நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர், ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:மாணவர்கள் எந்த படிப்பை படித்தாலும், அவர்களின் தனித்திறமைக்கே வேலை என்ற நிலை தான், எதிர்காலத்தில் உருவாகப் போகிறது.இன்ஜினியரிங்கில், வேலையில்லா திண்டாட்டத்தை விட, மாணவர்களிடையே போதிய, திறமை இல்லா திண்டாட்டமே அதிகம் உள்ளது. பாடப் புத்தகங்களை தாண்டி, வேலை வாய்ப்பை பெற, புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள், தெரிந்து கொள்ள வேண்டும்.நுாலகங்கள் மற்றும் இணையதளங்கள் வழியாகவும், தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று புதிய தொழில்நுட்ப புரட்சி நடக்கிறது.அதனால், பல பழைய தொழில்கள் அழிந்துள்ளன. அன்று மனிதனுக்கும், மனிதனுக்கும் போட்டி இருந்தது. இன்று, மனிதனுக்கும், இயந்திரங்களுக்கும் போட்டி உள்ளது.அதற்கேற்ப, மதிப்பெண்களை விட, போட்டிகளில் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கே வேலை கிடைக்கும். ஆங்கிலத்துடன், பிற நாட்டு மொழிகளையும் அதிகம் கற்க வேண்டும். ஜப்பான், ஜெர்மனி மொழிகளை கற்பிக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்தால், மாணவர்களுக்கு நல்லது.இவ்வாறு, அவர் பேசினார்.கல்லுாரியை விழிப்புடன்தேர்ந்தெடுங்கள்!நிகழ்ச்சியில், 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவன தலைவர், ஸ்ரீராம் பேசியதாவது:இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம் இன்றி, வரும் காலங்களில், எந்த துறையும் இயங்காது.

மாணவர்கள் தங்களின் திறனுக்கேற்ப, வேலை வாய்ப்புகளை தரும், கல்லுாரி நிர்வாகங்களை விழிப்புடன் தேர்வு செய்ய வேண்டும்.கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தால் மட்டும் போதாது. அந்த பாடத்தை சரியாக படிப்பதிலும் மாணவர்கள், அக்கறை செலுத்த வேண்டும். மருத்துவம் படித்து, வாழ்க்கையில் அடைய விரும்பும் அனைத்து வசதிகளையும்,இன்ஜினியரிங் படிப்பிலும் மாணவர்கள் பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X