சச்சினா... இம்ரானா...| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சச்சினா... இம்ரானா...

Added : ஜூன் 24, 2019
sachin,imran

புதுடில்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இம்ரான் கான், 66. இவரது தலைமையிலான அணி 1992ல் உலக கோப்பை வென்றது. ஓய்வுக்கு பின், அரசியலில் கால் பதித்த இவர், தற்போது பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். இவரது தனிப்பட்ட உதவியாளர் நயீம் உல் ஹக், தனது 'டுவிட்டரில்' பேட்டுடன் நிற்கும் வீரர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு,' 1969ல் பிரதமர் இம்ரான் கான்' என குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் இது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் இளம் வயது புகைப்படம். அடுத்த சில நிமிடத்தில், 'நெட்டிசன்கள்' தங்களது வேலையை துவக்கினர். சச்சினுக்கும், இம்ரான் கானுக்கும் வித்தியாசம் தெரியாதா என நயீமை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X