புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மோடியின் அலையில் தப்பியது காங்., மட்டுமே என காங்., கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலத்துக்கு முன், எவராலும் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதை, 'சுனாமி' என்றும் கூறுகின்றனர். மோடியின் பிரபலத்தை ஒப்பு கொள்ளாவிட்டால், தேர்தலையே புறக்கணிப்பதாக அமைந்து விடும். ஆனால், தேர்தலுக்குப் பின், காங்., மட்டுமே தப்பியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில், 44 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்., 2019 லோக்சபா தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.