ராணுவத்தை அவமதித்த ராகுல்: வழக்கறிஞர் புகார்

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
மும்பை : சர்வதேச யோகா தினத்தன்று இந்திய ராணுவத்தை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் அவர் மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.அடல் பிகாரி துபேமும்பையை சேர்ந்த ஆசாத் மைதான் காவல் நிலையத்தில், வழக்கறிஞர் அடல் பிகாரி துபே ராகுல் மீது இந்த புகாரை அளித்தார். ராகுல் தனது

மும்பை : சர்வதேச யோகா தினத்தன்று இந்திய ராணுவத்தை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் அவர் மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.



latest tamil news



அடல் பிகாரி துபே


மும்பையை சேர்ந்த ஆசாத் மைதான் காவல் நிலையத்தில், வழக்கறிஞர் அடல் பிகாரி துபே ராகுல் மீது இந்த புகாரை அளித்தார். ராகுல் தனது டுவிட்டர் பதிவில் ராணுவத்தினரும், ராணுவ நாய்கள் பிரிவும் எதிர் எதிரே யோகா செய்யும் படத்தை பதிவு செய்து, 'புதிய இந்தியா பிறந்தது,' என்று கருத்திட்டிருந்தார்.


latest tamil news



ராணுவ அவமதிப்பு

இது ராணுவத்தை அவமதிக்கும் செயல் என்றும், ராகுல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனது புகாரில் அடல் பிகாரி துபே குறிப்பிட்டுள்ளார். ஆசாத் மைதான் போலீசார் புகார் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
வழக்கறிஞர் துபே கூறுகையில், ''உயர்ந்தபட்ச மரியாதைக்குரியது இந்திய ராணுவம். ஆனால், ராகுல் ராணுவத்தை அவமதித்துவிட்டார். அதேபோல், இந்தியாவிலும், உலகின் பல நாடுகளிலும் மக்களின் விருப்பதிற்குரிய நம்பிக்கையான யோகாவையும் கிண்டல் செய்துள்ளார்.


latest tamil news



அமித்ஷா கண்டனம் :

எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்,'' என்று அதில் கூறியுள்ளார். யோகா தினத்தன்றே பா.ஜ., தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும், ''முத்தலாக் போன்றே யோகா குறித்தும் எதிர்மறை சிந்தனை கொண்டுள்ளது காங்கிரஸ்,'' என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-201920:05:22 IST Report Abuse
ram பரதசேி-பாலா படம்
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
24-ஜூன்-201917:25:09 IST Report Abuse
ANANDAKANNAN K இவர் இன்னும் முதிர்ச்சி பெறாதவர், யோகா என்பதை இவர்கள் மதம் சார்ந்து பார்க்க வேண்டாம், உடல் சார்ந்து,உள்ளம் சார்ந்து பார்க்க வேண்டும், தான் செய்யவில்லை என்றால் பரவாயில்லை பிறரை கொச்சை படுத்த வேண்டாம், யோகா என்பது உலக நாடுகள் எல்லாம் ஏற்று அவர்களும் செய்கிறார்கள் ஆனால் அது உண்டான நாட்டில் தேர்தல் மற்றும் ஒட்டு வங்கிக்காக இவரு தரம் தாழ்ந்து விமர்ச்சனம் செய்ய வேண்டாம்.
Rate this:
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
24-ஜூன்-201916:29:17 IST Report Abuse
Ramamoorthy P உடலையும் மனதையும் சம நிலைக்கு கொண்டுவரும் ஒரு அற்புதமான கலை தான் யோக கலை. மதம் , மொழி ,இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மனித குல நலனை மட்டுமே சிந்தித்து பதஞ்சலி முனிவரால் கண்டறியப்பட்ட யோக சூத்திரம் . இது கற்பூர வாசனையறியா கழுதைகளுக்கானதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X