அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சி மாறுமாம்: ஸ்டாலின் இன்னும் உறுதி

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (81)
Advertisement

சென்னை; தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை அதிமுக ஆட்சி கவலைப்படவில்லை. தேர்தல் வராமலே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.







ஆர்ப்பாட்டம் :


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை கண்டித்தும், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க கோரியும் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 24) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.






குடம் இங்கே ; தண்ணீர் எங்கே?


இதில் பேசிய ஸ்டாலின், '' தமிழகத்தில் நீதிக்கு பஞ்சம் வந்தது போல, நேர்மைக்கு பஞ்சம் வந்தது போல, குடிநீருக்கும் பஞ்சம் வந்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய நிலையில் முதல்வரோ, துணை முதல்வரோ, உள்ளாட்சித்துறை அமைச்சரோ இல்லை. குடம் இங்கே, தண்ணீர் எங்கே என்ற நிலை தான் உள்ளது.


ஆட்சியை காப்பாற்றவே யாகம் ;


அவர்கள் மழைக்காக யாகம் நடத்தவில்லை. ஆட்சியை காப்பாற்றவே யாகம் நடத்துகிறார்கள். கடந்த ஓராண்டுக்கு முன்பே சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரிகள் குறைந்துகொண்டே வருகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சட்டமன்றத்தில் நான் எச்சரித்தேன். இப்போது ஐ.டி.,ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.






4 குடிநீர் திட்டங்கள் :

சென்னை நெம்மேலி, போரூர், ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடியில் 4 குடிநீர் திட்டங்களை முதல்வர் அறிவித்தார். அவை இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை துரைமுருகனும், நானும் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.






நெம்மேலி ஊழல் ;

தமிழகத்தில் தேர்தல் வராமலே ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெம்மேலி குடிநீர் திட்டத்தில் ஏற்பட்ட ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்,'' என்றார்.


தி.மு.க சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க தொண்டர்கள். இடம்: சேப்பாக்கம்,சென்னை.

தி.மு.க சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க தொண்டர்கள். இடம்: சேப்பாக்கம்,சென்னை.




தமிழகத்தில் இன்னும் கூட ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் பேசியதை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினரே கண்டுகொள்ளாமல் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-201910:02:22 IST Report Abuse
Matt P எவ்வளவு தான் தடைகள் வந்தாலும் திருடன் இன்னும் திருட வாய்ப்புகள் வரும் என்று உறுதியாக நம்பிக்கையோடு இருப்பது இயற்கை தான் .
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-201910:00:13 IST Report Abuse
Matt P கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை துரைமுருகனும், நானும் வெளிக்கொண்டு வந்துள்ளோம். துரை முருகன் வீட்டில தான் வூழ்ல் பணம் இருந்ததை கையும் களவுமா புடிச்சாங்களே. இன்னுமா அவர் புடிச்சதையெல்லாம் பெருஸ்ஸா சொல்லிக்கிட்டு திரியுறீங்க .அந்த மனுஷனை இன்னும் கட்சியில வைச்சுக்கிட்டு திரியும் நீயெல்லாம் ...உங்க மருமோவன் பக்கத்தில நிக்காரே தயாநிதி மாறன்உம ரொம்ப சுத்தம் .....அது ஏன்பா ..அந்த சின்ன புள்ளை கையில பெரிய குடத்தை வைச்சு படம் புடிச்சிருக்கணும் ..உங்க பொழைப்புக்கு . தண்ணி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எப்போவோ கண்டிருக்கணும் ...... அரசியல் எனது தொழில் என்று திறம்படவே உனது திறமையை காட்டுறீக ...ஆமா ...தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் வந்து சுடலை அவரு அப்பா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்த உடன் ...தண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல பாய போகிறது தமிழகத்தில் இன்னும் கூட ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் பேசியதை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினரே கண்டுகொள்ளாமல் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்...சுடலை அவங்க சிரிச்சதை பாக்கலியா? ...கட்சியிலிருந்து நீக்க வேண்டாமா?...அதெல்லாம் சுயமரியாதை உள்ளவர்கள் செய்வார்கள் ..அவங்க ஆட்சியை காப்பாற்ற யாகம் செய்கிறார்களாம் ..அந்த யாகம் இவரை முதலமைச்சர் ஆகவிடாமல் தடுத்து விடும் என்று பயப்படுகிறார் ...இந்த பகுத்தறிவு
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
25-ஜூன்-201919:21:39 IST Report Abuse
karutthu அண்ணன் வைகோவின் வீர ஆவேச குரல் எங்கே ??? அண்ணன் தலைமையில் கே ஆர் எஸ் டேம் லிருந்து சென்னை வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கலாம் .நடக்கும் பொழுது நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X