நாகை தேவாலயத்தில் ஆண்டு திருவிழா

Added : ஜூன் 24, 2019 | |
Advertisement
நாகப்பட்டினம்: நாகை அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு நடந்த பெரிய சப்பர பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நாகை, கடற்கரை சாலையில், பல நூற்றாண்டுகள் பழமையான அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய ஆண்டு திருவிழா, கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, செபமாலை, மறையுரை, தேர்பவனி

நாகப்பட்டினம்: நாகை அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு நடந்த பெரிய சப்பர பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நாகை, கடற்கரை சாலையில், பல நூற்றாண்டுகள் பழமையான அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய ஆண்டு திருவிழா, கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, செபமாலை, மறையுரை, தேர்பவனி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு, கூட்டு பாடல் திருப்பலிக்கு பின், பெரிய சப்பர பவனி நடந்தது. மறைமாவட்ட முதன்மை பாதிரியார் வின்சென்ட் தேவராஜ் மற்றும் பாதிரியார்கள் பெரிய சப்பரத்தை புனிதம் செய்து, பவனியை துவக்கி வைத்தனர்.மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய சப்பரத்தில், புனித லூர்து மாதா, அந்தோணியார் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X