அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு திட்டங்கள்; முதல்வர் தொடங்கி வைத்தார்

Added : ஜூன் 24, 2019
Advertisement
அரசு திட்டங்கள், காணொலி காட்சி, முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி

சென்னை : அரசின் பல்வேறு திட்டங்களை, காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்தந்த துறைகள் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கோவை மாவட்டம் ஆனை கட்டியில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஈரோடு பெருந்துறை, காஞ்சிபுரம் செய்யூர், வேலூர் மாவட்டம் நெமிலி மற்றும் ஆம்பூரில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளும் திறந்து வைக்கப்பட்டன.
கடலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிறப்பு மையக் கட்டிடம், தருமபுரி பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X