பொது செய்தி

தமிழ்நாடு

‛கவி‛க்கும், ‛இசை‛க்கும் இன்று பிறந்த நாள்: மறக்கமுடியுமா இரு மேதைகளை?

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (30)
Advertisement

தமிழ் சினிமாவின் அபூர்வம் கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும். நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள். இருவரும் ஒரே தேதியில் இன்று (ஜூன் 24) பிறந்தவர்கள் என்பதில் இருந்து தொடங்குகிறது அவர்களது ஒற்றுமை.


25 ஆண்டுகள் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருந்தார்கள். எம்.எஸ்.வி ஆர்மோனிய பெட்டி முன் அமர்ந்து ஸ்வரம் போட எதிரில் கண்ணதாசன் அமர்ந்து பேனா பிடித்து வார்த்தை போட அங்கு பிறந்த ஆயிரக்கணக்கான இறவா புகழ்பெற்ற பாடல்கள் இப்போதும் காற்றில் கலந்து நம் செவிகளை நனைத்துக் கொண்டிருக்கிறது.


கவியரசன் கண்ணதாசன்


கண்ணதாசன், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பிறந்தவர். இயற்பெயர் முத்தையா. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். நான்காயிரம் கவிதைகள், ஐயாயிரம் திரைப்படப் பாடல்கள் படைத்தவர்.

தேசிய விருது, சாகித்ய அகாதமி விருது என பல பெருமைக்குரிய விருதுகள் பெற்றவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.


மெல்லிசை மன்னர் எம்எஸ்வி


எம்எஸ்.விஸ்வநாதன், கேரள மாநிலம் பாலக்காட்டில் 1928ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன். முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும்படி இருந்த திரையிசையை, படித்தவன் முதல் பாமரன் வரை ரசிக்கும்படியும், அதன் ராக லட்சணங்கள் மாறாமலும், திரையிசையை மெல்லிசையாக்கி தந்த மேதை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் ஏறக்குறைய 700 படங்களுக்கும் மேல் இசை அமைத்திருக்கின்றார் மெல்லிசை மன்னர்.
Advertisementநட்பின் இலக்கணம்


ஒரு நாள் நள்ளிரவு எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டு டெலிபோன் மணி அடிக்கிறது. எதிரே பேசிய குரல் "அண்ணா... கண்ணதாசன் நம்மளையெல்லாம் தவிக்க விட்டுட்டு போயிட்டாருண்ணா" என்கிறது. "அய்யோ என் தெய்வமே..." என்று கதறியபடி தலையிலும், முகத்திலும் அடித்தபடியே காரில் கண்ணதாசன் வீட்டுக்கு செல்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். அழுது வடிந்த கண்ணீருடன் அவிழ்ந்த வேட்டியை பிடித்துக் கொண்டு அவர் வந்த காட்சியை வீட்டு ஹாலின் ஷோபாவில் அமர்ந்தபடி ரசித்துக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்து அழுது மாறி மாறி முத்தமிட்டு "எவனோ ஒருத்தன் நீ..." என்றபடி மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தார். "விஸ்வநாதா பதறாத. நான் தான் அப்படி போன் பண்ணச் சொன்னேன். நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேன்னு பார்க்கணும்போல இருந்திச்சு. அதான் அப்படிச் செய்ததேன்" என்றாராம்.

கோபத்துடன் எழுந்து செல்ல இருந்த விஸ்வநாதனை பிடித்து இழுத்து உட்கார வைத்த கண்ணதாசன். "விச்சு கோவிச்சுக்காத நான் செத்தா நீ தான் என் இறுதி சடங்கை நடத்தணும்" என்றாராம். குழந்தை மனசு கொண்ட விஸ்வநாதன் மீண்டும் அழத் தொடங்கிவிட்டார். பின்னாளில் கண்ணதாசன் மறைந்தபோது அவரது இறுதி சடங்கை முன்னின்று நடத்தினார் விஸ்வநாதன்.

"கண்ணதாசன் எனக்கு கிடைத்திருக்காவிட்டால் நான் ஆர்மோனிய பெட்டியை தூக்கிக் கொண்டு கேரளாவுக்கு பாட்டு வாத்தியாராக போயிருப்பேன்" என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

"அடுத்த பிறவியில் நானும், விஸ்வநாதனும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்" என்பார் கண்ணதாசன். இருவருக்கும் அப்படி ஒரு நட்பு இருந்தது. ஒரு சிறிய நிகழ்வு...


அனைத்தும் அறிந்தவர்


நான் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்" எகிப்திய இசையை கேட்டேன். "தென்றல் வந்து வீசாதோ" பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாசனையை கண்டேன். "அபூர்வ ராகத்தில்" நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ"வில் மெக்ஸிகன் இசையை கேட்டேன். உலகத்தில் உள்ள அனைத்து இசையும் அறிந்தவர் எம்எஸ் விஸ்வநாதன் என்று கண்ணதாசன் பெருமையாக கூறியிருந்தார்.எம்எஸ்வி., பயன்படுத்தாத இசை கருவி உண்டா?


எம்எஸ் விஸ்வநாதன் பயன்படுத்தாத இசைக் கருவி இல்லை, இசையை தவமாக நினைத்து பணியாற்றியவர். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, வட்டார வழக்கு என அத்தனை பரிமாணங்களிலும் முத்திரையை தனித்தன்மையுடன் பதித்து வெற்றி கண்டவர்.

கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் வரும். எல்லாம் பாடலுக்கானதாக இருக்கும். பல மாதங்கள் வரை இருவரும் பேசாமல் இருந்திருக்கிறார்கள். இருவரையும் இறுதியில் சேர்த்து வைத்துவிடுவார் எம்.ஜி.ஆர்.

"தெய்வத்தாய்" திரைப்படத்தில் வரும் "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்" என்ற பாடலில் ஆப்பிரிக்கன் இசைக் கருவியான 'பாங்கோஸ்" எனும் இசைக்கருவியைக் கொண்டே பாடலை ஆரம்பித்திருக்கும் அழகே அலாதி. அதே போல் "புதிய பறவை" திரைப்படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ", "பணத்தோட்டம்" திரைப்படத்தில் வரும் "பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா" என்று பல பாடல்களை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம்.இசை நிகழ்ச்சி


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் கொண்டாட்டமாக, ஜூலை 7ம் தேதி நினைத்தாலே இனிக்கும் என்ற தலைப்பில் லக்ஷ்மண் ஸ்ருதி இசை குழுவினர் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், டி.எம்.சவுந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார், ஸ்ரீநிவாஸ், மதுபாலகிருஷ்ணன் மெல்லிசை மன்னரின் பாடல்களை பாடுகிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கலந்து கொள்கிறார்கள்.

எலக்ட்ரானிக் இசை கருவிகளை பயன்படுத்தாமல் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது இசைக் கோர்ப்பின்போது பயன்படுத்திய இசைக் கருவிகளான ஹார்மோனியம், பியானோ, வீணை, சித்தார், சாரங்கி, சந்தூர், புல்லாங்குழல், சாக்ஸபோன், க்ளாரினெட், மவுத் ஆர்கன், ஷெனாய், நாதஸ்வரம், வயலின், உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இருவருமே தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலம் இசை ஆட்சி செய்தவர்கள். இருவருமே தங்கள் காலத்தில் பணத்தை பெரிய விஷயமாக கருதவில்லை. பாடல், சுயமரியாதை, புகழ் இதுவே போதும் என்றிருந்தார்கள். இருவரின் உழைப்புக்குரிய அங்கீகாரத்தை திரையுலகமும் சரி, வெளியுலகமும் சரி தரவே இல்லை. இன்று காமெடியன்கள் வாங்கும் தேசிய விருதுகூட எம்.எஸ்.விக்கு கிடைக்கவில்லை.

இருவருக்கும் இன்று பிறந்த நாள். இதை நிச்சயம் திரையுலகம் கொண்டாடப்போவதில்லை. அவர்களின் சங்க சண்டையே பெரிதாக இருக்கிறது. அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. தமிழகமே கொண்டாடும் இந்த இசை மாமேதைகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது நமக்கு பெருமை.


கண்ணதாசன் - எம்எஸ்வி கூட்டணியில் வெளிவந்த தனிப்பாடல்கள் • எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன் - பணம் - என் எஸ் கிருஷ்ணன் - கண்ணதாசன்
 • செந்தமிழ் தேன்மொழியாள் - மாலையிட்ட மங்கை - டி ஆர் மகாலிங்கம் - கண்ணதாசன்
 • தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் - பாகப்பிரிவினை - பி சுசிலா - கண்ணதாசன்
 • அச்சதம என்பது மடமையடா - மன்னாதி மன்னன் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் - பாக்கியலக்ஷ்மி - பி சுசிலா - கண்ணதாசன்
 • உடலுக்கு உயிர் காவல் - மணப்பந்தல் - பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் - பாலும் பழமும் - பி சுசிலா - கண்ணதாசன்
 • காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு - பாவமன்னிப்பு - பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் - பாவமன்னிப்பு - பி சுசிலா - கண்ணதாசன்
 • தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே - ஆலயமணி - எஸ் ஜானகி - கண்ணதாசன்
 • ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே - காத்திருந்த கண்கள் - சீர்காழி எஸ் கோவிந்தராஜன் - கண்ணதாசன்
 • சொன்னது நீதானா சொல் சொல் என் உயிரே - நெஞ்சில் ஓர் ஆலயம் - பி சுசிலா - கண்ணதாசன்
 • பாவாடை தாவணியில் பார்த்த உருவமா - நிச்சய தாம்பூலம் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - பாசம் - எஸ் ஜானகி - கண்ணதாசன்
 • நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள் - பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமைதாங்கி - பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா - ஆனந்த ஜோதி - பி சுசிலா - கண்ணதாசன்
 • தேவன் கோயில் மணி ஓசை - மணி ஓசை - சீர்காழி எஸ் கோவிந்தராஜன் - கண்ணதாசன்
 • நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை - பி சுசிலா - கண்ணதாசன்
 • பார் மகளே பார் பார் மகளே பார் - பார் மகளே பார் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை - பணத்தோட்டம் - பி சுசிலா - கண்ணதாசன்
 • ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு - ஆண்டவன் கட்டளை - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - கை கொடுத்த தெயவம் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் - சீர்காழி எஸ் கோவிந்தராஜன் - கண்ணதாசன்
 • கண்ணுக்கு குலமேது - கர்ணன் - பி சுசிலா - கண்ணதாசன்
 • என்னுயிர்த் தோழி கேளொரு சேதி - கர்ணன் - பி சுசிலா - கண்ணதாசன்
 • கண்கள் எங்கே - கர்ணன் - பி சுசிலா - கண்ணதாசன்
 • அம்மம்மா கேளடி தோழி - கருப்பு பணம் - எல் ஆர் ஈஸ்வரி - கண்ணதாசன்
 • ஆடவரெல்லாம் ஆடவரலாம் - கருப்பு பணம் - எல் ஆர் ஈஸ்வரி - கண்ணதாசன்
 • கேள்வி பிறந்தது அன்று - பச்சை விளக்கு - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • உன்னை ஒன்று கேட்பேன் - புதிய பறவை - பி சுசிலா - கண்ணதாசன்
 • பார்த்த ஞாபகம் இல்லையோ - புதிய பறவை - பி சுசிலா - கண்ணதாசன்
 • எங்கே நிம்மதி - புதிய பறவை - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் - ஆனந்தி - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • காதல் நிலவே கண்மனி ராதா - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் - பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் - பி சுசிலா - கண்ணதாசன்
 • அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் - ஆயிரத்தில் ஒருவன் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ - ஆயிரத்தில் ஒருவன் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே - நீலவானம் - பி சுசிலா - கண்ணதாசன்
 • யார் அந்த நிலவு - சாந்தி - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • உன்னைத்தான் நானறிவேன் - வாழ்க்கைப்படகு - பி சுசிலா - கண்ணதாசன்
 • சின்ன சின்ன கண்ணனுக்கு - வாழ்க்கைப்படகு - பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • கண்ணன் என்னும் மன்னன் பேரை - வெண்ணிற ஆடை - பி சுசிலா - கண்ணதாசன்
 • அம்மம்மா காற்று வந்து - வெண்ணிற ஆடை - பி சுசிலா - கண்ணதாசன்
 • என்ன என்ன வார்த்தைகளோ - வெண்ணிற ஆடை - பி சுசிலா - கண்ணதாசன்
 • மௌனமே பார்வையால் ஒரு பாட்டு - கொடிமலர் - பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • நிலவே என்னிடம் நெறுங்காதே - ராமு - பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • தேடினேன் வந்தது - ஊட்டி வரை உறவு - பி சுசிலா - கண்ணதாசன்
 • கேட்டவரெல்லாம் பாடலாம் - தங்கை - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • முத்து நகையே உன்னை நானறிவேன் - என் தம்பி - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • எங்கே நான் வாழ்ந்தாலும் - கல்லும் கனியாகும் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • தை மாத மேகம் அது தரையில் ஆடுது - குழந்தைக்காக - பி சுசிலா - கண்ணதாசன்
 • ராமன் எத்தனை ராமனடி - லக்ஷ்மி கல்யாணம் - பி சுசிலா - கண்ணதாசன்
 • கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா - தெய்வமகன் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • கடவுள் ஒரு நாள் உலகை காண - சாந்தி நிலையம் - பி சுசிலா - கண்ணதாசன்
 • பட்டத்து ராணி பார்க்கும் பார்வை - சிவந்த மண் - எல் ஆர் ஈஸ்வரி - கண்ணதாசன்
 • நான் உன்னை அழைக்கவில்லை - எங்கிருந்தோ வந்தாள் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு - காவியத்தலைவி - பி சுசிலா - கண்ணதாசன்
 • அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு - ராமன் எத்தனை ராமனடி - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - அவளுக்கென்று ஓர் மனம் - எஸ் ஜானகி - கண்ணதாசன்
 • வசந்தத்தில் ஓர் நாள் - மூன்று தெய்வங்கள் - பி சுசிலா - கண்ணதாசன்
 • சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - சவாலே சமாளி - பி சுசிலா - கண்ணதாசன்
 • இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - சூரியகாந்தி - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன் - எஸ் பி பாலசுப்ரமணியம் - கண்ணதாசன்
 • தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு - அவள் ஒரு தொடர்கதை - கே ஜே ஏசுதாஸ் - கண்ணதாசன்
 • அதிசய ராகம் ஆனந்த ராகம் - அபூர்வ ராகங்கள் - கே ஜே ஏசுதாஸ் - கண்ணதாசன்
 • ஆட்டுவித்தார் யாரொருவர் - அவன்தான் மனிதன் - டி எம் சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்
 • நாதமெனும் கோவிலிலே - மன்மத லீலை - வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - மன்மத லீலை - கே ஜே ஏசுதாஸ் - கண்ணதாசன்
 • கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது - எஸ் பி பாலசுப்ரமணியம் - கண்ணதாசன்
 • அங்கும் இங்கும் - அவர்கள் - எஸ் பி பாலசுப்ரமணியம் - கண்ணதாசன்
 • வான் நிலா நிலா அல்ல - பட்டினப்பிரவேசம் - எஸ் பி பாலசுப்ரமணியம் - கண்ணதாசன்
 • எங்கேயும் எப்போதும் சங்கீதம் சங்தோஷம் - நினைத்தாலே இனிக்கும் - எஸ் பி பாலசுப்ரமணியம் - கண்ணதாசன்
 • ராகங்கள் பதினாறு உருவான வரலாறு - தில்லு முல்லு - எஸ் பி பாலசுப்ரமணியம் - கண்ணதாசன்


கண்ணதாசன் - எம்எஸ்வி., கூட்டணியில் வெளிவந்த டூயட் பாடல்கள்


 • கண்மூடும் வேலையிலும் கலை என்ன - மகாதேவி - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • கனிய கனிய மழலை பேசும் கண்மனி - மன்னாதி மன்னன் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் - பாலும் பழமும் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாசமலர் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • வளர்ந்த கலை மறந்துவிட்டாள் - காத்திருந்த கண்கள் - பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • பூஜைக்கு வந்த மலரே வா - பாதகாணிக்கை - பி பி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி - கண்ணதாசன்
 • பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை - படித்தால் மட்டும் போதுமா - டி எம் சௌந்தர்ராஜன், பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • கொடி அசைந்ததும் காற்று வந்ததா - பார்த்தால் பசி தீரும் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம் - பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • இந்த மன்றத்தில் ஓடி வரும் - போலீஸ்காரன் மகள் - பி பி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி - கண்ணதாசன்
 • ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன் - பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • பனியில்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை - நெஞ்சம் மறப்பதில்லை - பி பி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி - கண்ணதாசன்
 • மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார் - பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • பேசுவது கிளியா - பணத்தோட்டம் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • அன்று வந்ததும் அதே நிலா - பெரிய இடத்துப் பெண் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • அமைதியான நதியினிலே ஓடம் - ஆண்டவன் கட்டளை - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • யாரது யாரது தங்கமா - என் கடமை - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • தங்கரதம் வந்தது வீதியிலே - கலைக்கோயில் - எம் பாலமுரளிகிருஷ்ணா, பி சுசிலா - கண்ணதாசன்
 • இரவும் நிலவும் வளரட்டுமே - கர்ணன் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • நாளாம் நாளாம் திருநாளாம் - காதலிக்க நேரமில்லை - பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை - பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • என்னப் பார்வை உந்தன் பார்வை - காதலிக்க நேரமில்லை - கே ஜே ஏசுதாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • தூது செல்ல ஒரு தோழி இல்லை என - பச்சை விளக்கு - பி சுசிலா, எல் ஆர் ஈஸ்வரி - கண்ணதாசன்
 • பறக்கும் பந்து பறக்கும் - பணக்கார குடும்பம் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • போக போக தெரியும் - சர்வர் சுந்தரம் - பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • நாணமோ இன்னும் நாணுமோ - ஆயிரத்தில் ஒருவன் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - பழனி - டி எம் சௌந்தர்ராஜன், சீர்காழி எஸ் கோவிந்தராஜன், பி பி ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன்
 • உலகம் எங்கும் ஒரே மொழி - நாடோடி - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா - பறக்கும் பாவை - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும்வரை - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • அங்கே மாலை மயக்கம் யாருக்காக - ஊட்டி வரை உறவு - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • சின்னவளை முகம் சிவந்தவளை - புதிய பூமி - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • இயற்கை என்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா - கண்ணதாசன்
 • ஒரு நாளிலே உறவானதே - சிவந்த மண் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • ஒரு ராஜா ராணியிடம் - சிவந்த மண் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • மங்கையரில் மகராணி - அவளுக்கென்று ஓர் மனம் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா - கண்ணதாசன்
 • பொட்டு வைத்த முகமோ - சுமதி என் சுந்தரி - எஸ் பி பாலசுப்ரமணியம், பி வசந்தா - கண்ணதாசன்
 • மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி - உத்தரவின்றி உள்ளே வா - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா - கண்ணதாசன்
 • காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ - உத்தரவின்றி உள்ளே வா - பி சுசிலா, எம் எல் ஸ்ரீகாந்த் - கண்ணதாசன்
 • பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - தர்மம் எங்கே - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே - கௌரவம் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா - கண்ணதாசன்
 • மதன மாளிகையில் - ராஜபார்ட் ரங்கதுரை - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • பொன்னான மனம் எங்கு போகின்றதோ - திருமாங்கல்யம் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா - கண்ணதாசன்
 • விழியே கதை எழுது - உரிமைக்குரல் - கே ஜே ஏசுதாஸ், பி சுசிலா - கண்ணதாசன்
 • அன்பு நடமாடும் கலைக்கூடமே - அவன்தான் மனிதன் - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • காதல் ராஜ்ஜியம் எனது - மன்னவன் வந்தானடி - டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா - கண்ணதாசன்
 • வசந்த கால நதியினிலே வைரமணி நீரலைகள் - மூன்று முடிச்சு - பி ஜெயசந்திரன், வாணி ஜெயராம், எம் எஸ் விஸ்வநாதன் - கண்ணதாசன்
 • இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது - எஸ் பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் - அந்தமான் காதலி - கே ஜே ஏசுதாஸ், வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - இமயம் - கே ஜே ஏசுதாஸ், வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா - நினைத்தாலே இனிக்கும் - எஸ் பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும் - எஸ் பி பாலசுப்ரமணியம், எல் ஆர் ஈஸ்வரி - கண்ணதாசன்
 • வீணை சிரிப்பில் ஆசை அணைப்பில் - நூல் வேலி - எஸ் பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே - திரிசூலம் - கே ஜே ஏசுதாஸ், வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • இரவும் பகலும் எனக்கு உன்மேல் கண்ணோட்டம் - பில்லா - மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன் - பொல்லாதவன் - எஸ் பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் - கண்ணதாசன்
 • சிப்பி இருக்குது முத்தும் இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு - எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி - கண்ணதாசன்
 • தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த - அந்த 7 நாட்கள் - பி ஜெயசந்திரன், எஸ் ஜானகி - கண்ணதாசன்
 • விடிய விடிய சொல்லி தருவேன் - போக்கிரி ராஜா - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா - கண்ணதாசன்

தினமலரில் எம்எஸ்.விஸ்வநாதன் சிறப்பு இணையதளம் : https://cinema.dinamalar.com/msv/
தினமலரில் கண்ணதாசன் சிறப்பு இணையதளம் : https://cinema.dinamalar.com/kannadasan/

Advertisement
வாசகர் கருத்து (30)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
S.A.D.Rasheed - Chennai,இந்தியா
24-ஜூன்-201914:45:09 IST Report Abuse
S.A.D.Rasheed காலத்தை வென்ற கவிஞன். தமிழ் உள்ள மட்டும் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். அவன் நிரந்தரமானவன். தன் குறையையும் தைரியமாக ஒத்துக்கொண்ட ஒரு திறந்த புத்தகம். தமிழை, அதன் அழகை பாமரனுக்கும் கொண்டு சேர்த்த பெருமைக்கு உடையவன். கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணி தமிழுக்கு, திரை இசைக்கு ஒரு வரப்பிரசாதம். என்றும் சிரஞ்சீவித் தன்மையுடயவை. போற்றுவோம் அவர்தம் புகழை இந்நாளில். "பாமர ஜாதியில் தனி மனிதன், படைத்ததனால் அவன் பேர் இறைவன்"
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
24-ஜூன்-201916:08:42 IST Report Abuse
வல்வில் ஓரி ரசீத் ...அருமை .....
Rate this:
Share this comment
Cancel
24-ஜூன்-201912:52:16 IST Report Abuse
ருத்ரா மனதில் நிறைந்தவர்களை மறைந்தவர்களாய் ஏற்க முடியவில்லை. கண்ணதாசன் கவி மற்றும் எழுத்து சித்தர். இசை அமைத்தவரோ எக்காலத்தும் மாறாத இசை அருள் பெற்ற ஸரஸ்வதி. இருவரின் நினைவுகள்எங்கள் உள்ளத்தின் உயிரோட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Naga - Muscat,ஓமன்
24-ஜூன்-201912:38:58 IST Report Abuse
Naga மாமேதைகளுக்கு எனது நினைவு அஞ்சலிகள்
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
24-ஜூன்-201912:35:52 IST Report Abuse
oce அட்டா என்ன ஒற்றுமை இவர்கள் இருவருக்கும். தெய்வப்பிறவிகள்.இவர்களால் அழகிய தமிழ் மகள் இசையுடன் வளர்ந்தாள். இனி இவர்கள் போல் எவரும் வரப்போவதில்லை. இறைவன் இப்படி அதிசயமானவர்களை படைத்து பின் அவனே எடுத்துக்கொள்வது ஏன். அவர்களை இன்னும் ஒரு நூற்றாண்டாவது விட்டு வைத்திருக்கலாமே. நாம் அவரகளது புகழுடம்பையாவது மறவாமல் ஆயுள் பரியந்தம் மனதில் வைத்திருப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X