கண்ணான கண்ணே புகைப்பட கண்காட்சி காண வா!

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019
Share
Advertisement



latest tamil news


இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கும் சென்னை புகைப்பட கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.
செ


latest tamil news


ன்னையில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் கீரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா கலா அகாடமியில் கடந்த 19 ந்தேதி துவங்கிய கண்காட்சி நாளையுடன் 25/06/2019 ந்தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது.


latest tamil news


Advertisement


இந்த புகைப்பட கண்காட்சியில் 88 புகைப்படக் கலைஞர்களின் 250 தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு படமும் 30க்கு 20 என்ற அளவில் பெரிதாக வைக்கப்பட்டு உள்ளது.அனுமதி இலவசம், நேரம் பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை.


latest tamil news



படங்களை எடுத்த புகைப்பட பிரம்மாக்களில் பலர் தாங்கள் எடுத்த படங்களின் அருகிலேயே இருந்து விளக்கம் தருவதும்,வைல்டுலைப்,பிளாக் அண்ட் ஒயிட்,போர்ட்ரைட் என்று தீம் அடிப்படையில் படங்கள் வரிசைப்படுத்தி இருப்பதும் கண்காட்சியி்ன் கூடுதல் சிறப்பாகும்.


latest tamil news


கலைகளிலேயே புகைப்படக்கலையை ரசிப்பதுதான் மிக எளிதாகும். கண்களை மனதையும் மட்டும் திறந்து வைத்துக்கொண்டு கண்காட்சிக்குள் உலாவினால் சந்தோஷம் பொங்க திரும்பலாம்.வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் முடிந்தால் வீட்டில் உள்ள பெண்கள் குழந்தைகள் என்று குடும்பத்துடன் சென்று பாருங்கள்


latest tamil news




latest tamil news




latest tamil news



-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X