பொது செய்தி

இந்தியா

சம்பளம் போட பணமில்லை: பிஎஸ்என்எல்., திணறல்

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (47)
Share
Advertisement

புதுடில்லி: ஊழியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் அளிப்பதற்கு கூட பணம் இல்லை என பிஎஸ்என்எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல்., நிறுவனத்தில் ஏறக்குறைய 1.7 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.latest tamil news


பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய அரசிடம் அளித்துள்ள அறிக்கையில், ஏறக்குறைய ரூ.13,000 கோடி அளவிற்கு நிலுவை தொகை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ரூ.850 கோடி ஜூன் மாத சம்பள தொகையை ஊழியர்களுக்கு அளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் அளித்துள்ள புள்ளி விபரத்தின்படி, 2008-09 நிதியாண்டில் தான் கடைசியாக ரூ.575 கோடி லாபம் ஈட்டப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து வருவாய் படிப்படியாக சரிந்து வந்துள்ளது. 2017-18 ம் ஆண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.22, 668 கோடி அளவிலேயே நிறுவனத்தின் வருவாய் இருந்துள்ளது. 2018-19 ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் கடன்தொகை ரூ.14,000 கோடி ஆக உள்ளது.


latest tamil news2018 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்நிறுவனத்தின் நஷ்ட தொகை ரூ.90,000 கோடியை தாண்டி உள்ளது. அதிகமான ஊழியர்கள், மோசமான நிர்வாகம், தேவையற்ற தலையீடுகள், தாமதமான நவீனமயமாக்கல் திட்டங்கள் ஆகியன பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மத்திய அரசு 5ஜி தொலைத்தொடர்பு ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை கூட அளிக்கவில்லை.


latest tamil newsசில மாதங்களுக்கு முன், பிஎஸ்என்எல்., நிலையை சரிசெய்வதற்காக பிரதமர் மோடி சில மாற்றங்களை கொண்டு வந்தார். இருந்தும் தீர்வு ஏற்படவில்லை. வருவாய் இல்லாத நிலையில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது பிஎஸ்என்எல்., நிறுவனத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam Rajarajan - Erode,இந்தியா
25-ஜூன்-201918:57:35 IST Report Abuse
Sam Rajarajan அ.ராஜாவை எதற்காக இருக்கிறார்கள. அவர் அமைச்சரவை பொறுப்பிலிருந்த போது bsnl முதல் இடத்தில் இருந்தது.
Rate this:
Cancel
Sam Rajarajan - Erode,இந்தியா
25-ஜூன்-201918:53:48 IST Report Abuse
Sam Rajarajan 4G வசதி முதலில் Bsnlக்கு கொடுத்திருக்க வேண்டும். பொது துறையை மூட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தால் துறை எவ்வாறு முன்னேறும்.
Rate this:
Cancel
25-ஜூன்-201911:38:33 IST Report Abuse
theruvasagan அரசு நிறுவனம் என்று ஆகிவிட்டபடியால் மேல்மட்டத்திலிருந்து கீழ் நிலை வரை வேலை செய்பவர்கள் பெரும்பாலும் நாற்காலி தேய்க்கும் ரகம்தான். செய்யும் வேலைக்குப் பொருந்தாத அபரிமிதமான சம்பளம். துக்ளக் ராஜ்ஜியம் மாதிரி கள நிலவரத்தை படிக்காமல் தன்னிச்சையான சேவை மற்றும் அதில் உருப்படாத மாற்றங்கள். தனியார் தொலை தாெடர்பு நிறுவனங்களில் உபயோகிப்பாளர்களை கவரும் விதமான திட்டங்கள், கணினி வழியாகவே திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சேவை நீட்டிப்பு செய்து கொள்ளும் வசதி முதலியவை சவுகரியமான அம்சங்கள். சில சமயம் அவர்கள் சேவை மையத்துக்குப்போகவேண்டியிருந்தாலும் நம் குறைகளை காதுகொடுத்துக் கேட்டு ஆவன செய்வார்கள். பல தடவை பிஎஸ்என்எல் சேவை மையத்தில் போய் புதிதாக வந்த சேவை பற்றிக் கேட்டால் தெரியாது என்று முழிப்பதும் பின்பு நமக்கு வந்த குறுஞ்செய்தியைக் காட்டி அவர்களை தெரிந்து கொள்ளச் செய்வதும் வாடிக்கையான அனுபவங்கள். இன்னும் கூட பழையதாகிப்போன 3 ஜி சேவையையே கொடுக்க முடியாமல் 2 1/2 ஜி, 2ஜி என்று தொடரும் அவலம். இந்த தடவையாவது புதிய ஆட்சி என்ன செய்யப் போகிறதோ பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X