அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜூலை 1ல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் ஜூன் 28 தொடங்கி ஜூலை 30 வரையில், மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.ஜூலை 1ல் நம்பிக்கையில்லா தீர்மானம்?அவர் கூறுகையில், ''வரும் ஜூன் 28 அன்று சட்டசபை கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். பின்னர் அஜண்டா வழங்கப்படும். ஜூலை

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் ஜூன் 28 தொடங்கி ஜூலை 30 வரையில், மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.latest tamil newsஜூலை 1ல் நம்பிக்கையில்லா தீர்மானம்?


அவர் கூறுகையில், ''வரும் ஜூன் 28 அன்று சட்டசபை கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். பின்னர் அஜண்டா வழங்கப்படும். ஜூலை 1ம்தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது அஜண்டா வழங்கிய பிறகே தெரியும்.


latest tamil news
மானியக் கோரிக்கை நாட்கள் ;

ஜூலை 1ல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 2ம் தேதி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, 3ம் தேதி கூட்டுறவு, 4 ம் தேதி எரிசக்தி மற்றும் மதுவிலக்கு, 5 ம்தேதி மீன்வளம் மற்றும் பால்வளம், 8 ம்தேதி நகராட்சி நிர்வாகம், 9 ம்தேதி நீதி நிர்வாகம், 10 ம் தேதி சமூக நலம் மற்றும் சத்துணவு மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும்.

அதேபோல, ஜூலை 11 ல் தொழில்துறை மீதான மானியக் கோரிக்கையும், 12 ல், கைத்தறி மற்றும் துணிநுால், செய்தி மற்றும் விளம்பரத்துறை விவாதமும், 15ம் தேதி நெடுஞ்சாலைத்துறை, 16 ல் மக்கள் நல்வாழ்வு 17 ல், வேளாண்துறை, 18 ல் சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறையும், 19 ம் தேதி வருவாய்துறையும், 22 மற்றும் 23 ல் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கைகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும்.


23 நாள் கூட்டத்தொடர்

சபை நாட்களில் அனைத்து வேலை நாட்களுமே கேள்வி நேரம் இருக்கும். மொத்தம் கூட்டத்தொடர் 23 நாட்கள் நடைபெறுகிறது,'' என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-ஜூன்-201905:37:47 IST Report Abuse
meenakshisundaram WhatsApp இல் sutra வந்த 'பனியன் 'விளம்பரம் நினைவிருக்கட்டும் ,ஸ்டாலின் கூட ரெண்டு சட்டை. பனியன் ,மற்றும் வேஷ்டி கொண்டு வரவும் (இந்த தடவை தினகரனும் சபைக்குள் இருப்பதால் வேஷ்டி பத்திரம்) மேலும் பெல்ட் அணிந்து வர வேண்டும்.பட விளம்பரம் போல -மா பெரும் சண்டை காட்சிகள் ,உண்டு .
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஜூன்-201922:06:40 IST Report Abuse
ஆரூர் ரங் யமன் வாயிலிருந்து தீய முகவை காப்பாற்றமுடியாது . கெடுவான் கேடு நினைப்பான் என்பதுபோல இன்னும் எண்ணிக்கை குறைப்பார்
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
24-ஜூன்-201915:54:35 IST Report Abuse
ANANDAKANNAN K தமிழகத்தில் விட்டு எப்பொழுது இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்து அகற்ற படுகிறதோ அன்று தான் நமக்கு விடிவு காலம், நன்கு சார்ந்தவர்கள் சொல்வது, சபாநாயகர் தன் வேலைய சரிப்பட்டு செய்து கொண்டுதான் உள்ளார் ஆனால் ஆட்சி செய்யும் ஆட்கள்தான் பதவி சுகத்திற்கு ஆசை பட்டு, தங்கள் சேர்த்த சொத்தை காப்பாற்ற எல்லா வகையுளியும் அடிமைகள் போன்று செயல்படுகின்றனர், முதுகெலும்பு யில்லாத ஒருங்கிணைப்பாளர், முதல்வர் பதவி யார் போனாலும் நான் வகிக்க வேண்டும் என்று சிந்திக்கும் துணை ஒருங்கிணைப்பாளர், இந்த இரண்டு நபருக்கும் அவர்கள் ஊரில் கூட செல்வாக்கு இல்லை என்று மக்கள் தீர்ப்பில் அப்பட்டமாக தெரிந்து விட்டது, இருக்கும் வரை அனுபபிக்கலாம், அதற்க்கு மேலே இவர்கள் பாடு அநேகமா சென்னை மத்திய சிறை அல்லது வழக்குகளுக்கு முன் ஜாமின் மனு போட வேண்டும்.இதில் முதலில் முன் ஜாமின் கேட்கும் நபர் திரு.எடப்பாடி மற்றும் பெரியகுளத்துக்காரர் மட்டுமே , அதற்க்கு பிறகு மணிகள் கூட்டம், இது எல்லாம் DMK ஆட்சி வந்தவுடன் நடக்கும், அதற்குள் இவர்கள் அரசு முறைகேடு சம்பந்த பட்ட அலுவல் கோப்புக்குகளை சரி செய்தால் கொஞ்சம் தப்பலாம் இல்லை என்றால் கோர்ட் கோர்ட்டாக ஏறி இறங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X