ஜூலை 1ல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜூலை 1ல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (6)

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் ஜூன் 28 தொடங்கி ஜூலை 30 வரையில், மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.






ஜூலை 1ல் நம்பிக்கையில்லா தீர்மானம்?


அவர் கூறுகையில், ''வரும் ஜூன் 28 அன்று சட்டசபை கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். பின்னர் அஜண்டா வழங்கப்படும். ஜூலை 1ம்தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது அஜண்டா வழங்கிய பிறகே தெரியும்.






மானியக் கோரிக்கை நாட்கள் ;

ஜூலை 1ல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 2ம் தேதி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, 3ம் தேதி கூட்டுறவு, 4 ம் தேதி எரிசக்தி மற்றும் மதுவிலக்கு, 5 ம்தேதி மீன்வளம் மற்றும் பால்வளம், 8 ம்தேதி நகராட்சி நிர்வாகம், 9 ம்தேதி நீதி நிர்வாகம், 10 ம் தேதி சமூக நலம் மற்றும் சத்துணவு மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும்.

அதேபோல, ஜூலை 11 ல் தொழில்துறை மீதான மானியக் கோரிக்கையும், 12 ல், கைத்தறி மற்றும் துணிநுால், செய்தி மற்றும் விளம்பரத்துறை விவாதமும், 15ம் தேதி நெடுஞ்சாலைத்துறை, 16 ல் மக்கள் நல்வாழ்வு 17 ல், வேளாண்துறை, 18 ல் சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறையும், 19 ம் தேதி வருவாய்துறையும், 22 மற்றும் 23 ல் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கைகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும்.


23 நாள் கூட்டத்தொடர்

சபை நாட்களில் அனைத்து வேலை நாட்களுமே கேள்வி நேரம் இருக்கும். மொத்தம் கூட்டத்தொடர் 23 நாட்கள் நடைபெறுகிறது,'' என்றார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X