பொது செய்தி

இந்தியா

நாற்று வயலில் ஒரு சேற்று நடனம்!

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (5)
Advertisement

மங்களூரு ; கர்நாடக மாநிலத்தில், கோவில் திருவிழாவில் வயல் சகதி நீரில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாய் ''கேசர்ட் ஒஞ்சி தினா'' என்ற தங்களது பாரம்பரிய நாளை கொண்டாடினர்.







கேசர்ட் ஒஞ்சி தினா :


மங்களூருவில் உள்ள பவஞ்சே என்ற இடத்தில் கேசர்ட் ஓஞ்சி தினா எனும் நிகழ்ச்சி ஞான சக்தி சுப்ரமணிய கோவில் திருவிழாவிற்காக நடத்தப்பட்டது. இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் ஆண்டுதோறும் கேசர்ட் ஒஞ்சி தினாவை கொண்டாடுவது வழக்கம்.

விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர், இளையோர் அனைவரும் உற்சாகம் ததும்ப துள்ளல் நடனமாடி மகிழ்ந்தனர். ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுக்கள், விதவிதமான நடனங்கள் சகதி நிரம்பிய வயல் பாத்திகளில் நடந்தன.






கம்பாலா :


ஏற்கனவே மங்களூர் உள்ளிட்ட தென் கர்நாடக பகுதிகளில், இதேபோன்ற நெல் நாற்று வயல்களில் 'கம்பாலா' என்ற பெயரில், எருதுகளையும், எருமை கன்றுகளையும் விரட்டி பந்தயம் நடத்துவதும் குறிப்பிடத்தக்க விழாவாகும்.


ஜப்பானிலும்...


இதேபோன்ற பாரம்பரிய, கலாசார விழாவை ஜப்பானில் உள்ள சில சமூக மக்களும் அப்படியே பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
24-ஜூன்-201916:04:25 IST Report Abuse
வல்வில் ஓரி தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.....மழை வந்தா தான் இதெல்லாம் ....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூன்-201915:43:33 IST Report Abuse
Bhaskaran மேற்கத்திய நாகரீகத்துக்கு எதிராக இந்த பாரம்பரிய திருவிழாக்கள் மட்டுமே நம் இந்திய கலாச்சாரத்தை காத்து நிற்கும்
Rate this:
Share this comment
Sivak - Chennai,இந்தியா
24-ஜூன்-201918:44:17 IST Report Abuse
Sivakஅதனால் தான் இந்த அவங்க நம்ம தீபாவளி பண்டிகைய ஒழிக்க பாக்கறாங்க பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நிறுத்த பாக்கறாங்க விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு கட்டைய போடறாங்க ......
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
24-ஜூன்-201915:39:30 IST Report Abuse
ANANDAKANNAN K ஒரு சமுதாய மக்கள் வேற்றுமை இல்லாமல் வளர இந்த திருவிழா கை கொடுக்கும், பொருளாத ரீதியாக இந்த சமூக மக்கள் நன்கு வளர முடியம், தங்களுக்கு உரிய சமுதாய பங்கை அடைவார்கள்.வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X