‛தேசிய மீசை'; காங்கிரஸ் ஆசை

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி ; இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் அரிவாள் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி லோக்சபாவில் கோரிக்கை வைத்துள்ளார்.







ஆதிர்ரஞ்சன் சவுத்ரி :

இன்று (ஜூன் 24) விவாதத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், '' இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவருக்கு விருதளித்து உரிய முறையில் கவுரவிக்க வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தார்.






பாலக்கோடு தாக்குதல் :

காஷ்மீர், புல்வாமாவில் பயங்கரவாதிகள் மனிதகுண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலக்கோட்டில், பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கி அழித்தது.


பாக்.,இடம் பிடிபட்டார் :

அந்த தாக்குதலின் போது, பாக்., விமானத்தை தனது போர் விமானத்தில் துரத்தி சென்றார், தமிழகத்தை சேர்ந்த, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன். விமானம் பழுதாகி, பாகிஸ்தான் நாட்டிற்குள் இறங்கிய அவரை அந்நாட்டு ராணுவம் பிடித்து விசாரித்தது. எனினும், எந்த தகவலையும் அவர் சொல்லவில்லை.






அபிநந்தன் மீசை :

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களிடமும், இந்திய மக்களிடமும் அபிநந்தன் வீரமும், அவர் வைத்திருந்த அரிவாள் மீசையும் புகழ்பெற்றது. பின்னர் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக, பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டு, தற்போதும் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் அபிநந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201900:13:39 IST Report Abuse
sankar முதலில் ராவுளை அந்த மீசையை வைக்க சொல்லுங்க . கூடவெய் இந்த மன்ஸுனும் வைக்கட்டும் அப்புறம் நாட்டில் மற்றவரை பற்றி பேசுவோம்
Rate this:
Share this comment
Cancel
Achchu - Chennai,இந்தியா
24-ஜூன்-201918:41:30 IST Report Abuse
Achchu அது கட்டபொம்மன் மீசை பத்திரிகையாசிரியர் நக்கீரனின் பிரபலமான மீசை ட்ரேட்மார்க் சட்டப்படி அதை யாரும் உரிமை கோர முடியாது
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
24-ஜூன்-201918:20:14 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Such remarks are really chidish. They also seem to be saric.Should have been avoided.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X