புதுடில்லி : மேற்கு வங்க மாநிலத்தில், மேலும் ஒரு எம்.எல்.ஏ.,வும் 18 கவுன்சிலர்களும் பா.ஜ.,வில் இன்று (ஜூன் 24) இணைந்தனர். மேலும், பலர் பா.ஜ.,வை நோக்கி வருவார்கள் என்கிறார், புதிதாக சேர்ந்த அந்த எம்.எல்.ஏ., வில்சன் சம்பிராமி.

எம்எல்ஏ+ 18 கவுன்சிலர்கள்
மேற்கு வங்காள மாநிலம், அலிப்பூர்துவார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கல்ச்சினி தொகுதி எம்.எல்.ஏ., வில்சன் சம்பிராமி. இவர் இன்று புதுடில்லி வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சம்பிராமி, ''இப்போது என்னுடன் சேர்த்து 18 கவுன்சிலர்கள் பா.ஜ.,வில் இணைகின்றனர்.வரும் காலத்தில் மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பா.ஜ.,வில் இணைவார்கள்,'' என்றார்.

அரசியல் மோதல் ;
நடந்துமுடிந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 எம்.பி.,தொகுதிகளில் 18 ஐ பா.ஜ., வென்றது. அதன்பின்னர் பா.ஜ., மற்றும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் இடையில் அரசியல் போராட்டமும், தொண்டர்களிடையே அங்கு வன்முறைகளும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE