லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (43)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித்ஷா அளித்த அதிர்ச்சி வைத்தியத்தால் மக்களிடம் இருந்து அமைச்சர்களும், கட்சி தலைவர்களும் பெற்ற லஞ்சப் பணத்தை அவர்களிடமே திருப்பி கொடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.





நிலமற்ற விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள், திரிணாமுல் காங்., கட்சியினர் தங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக வெளிப்படையாக குற்றம்சாட்டி வருவது தான் மேற்குவங்கத்தின் இன்றைய நிலை.
நலத்திட்டங்களை பெறுவதற்காக பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட குறிப்பிட்ட தொகையை அவர்களிடம் திருப்பித் தருமாறு கட்சி தலைவர்களை முதல் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்ட பிறகே மக்கள் வெளிப்படையாக ஆளும் கட்சிக்கு எதிராக லஞ்சப் புகார்கள் கூறுவது அதிகரித்துள்ளது. இந்த லஞ்சத்தை அவர்கள் கவுரவமாக 'கமிஷன்' என்றும் கூறிக் கொள்கிறார்கள்.




பல மாநிலங்களில், இது போன்று லஞ்சம் வசூலிக்கப்படுவதும், அதற்கு ஆளும் கட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததும் அனைவரும் அறிந்ததே. ஆனால் மேற்குவங்கத்தில், தற்போது இது பெரிய பிரச்னையாக கிளம்பி உள்ளது.


கமிஷன் என்றால் என்ன ?


கமிஷன் என்பது, அரசு அதிகாரிகளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், அரசு நலதிட்டங்களை பெற ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை சட்ட விரோதமாக சாமானிய மக்களிடம் இருந்து பெறுவது.
லோக்சபா தேர்தல் சமயத்தில் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் கமிஷன் விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுத்தனர்.




லோக்சபா தேர்தல் கொடுத்த அதிர்ச்சி முடிவால், இந்த கமிஷன் விவகாரம் தான் தங்களின் சரிவிற்கு காரணம் என மம்தா நம்புகிறார். இதனால் தான் தங்கள் கட்சி லோக்சபா தேர்தலில் ஏராளமான இடங்களை இழந்ததாகவும் மம்தா நம்புகிறார்.
லோக்சபா தேர்தலில் மம்தா கட்சி 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ., தங்களுக்கென புதிய பாதை அமைத்து 18 இடங்களை கைப்பற்றியது. 2014 லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ., தற்போது 18 இடங்களாக வளர்ந்திருப்பது மிகப்பெரிய வளர்ச்சி ஆகும்.


இறுதி சடங்கு செய்ய கூட 200 லஞ்சமா?


இது பற்றி மம்தா கூறுகையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு அளிக்கும் ரூ.2000 தரக்கூட சில திரிணாமுல் தலைவர்கள் ரூ.200 லஞ்சமாக கேட்டதை அறிந்து வேதனை அடைகிறேன் என்றார்.
மம்தாவின் இந்த வார்த்தைகளுக்கு பிறகு பல கிராமங்களில் மக்கள் பஞ்சாயத்து அளவிலான திரிணாமுல் காங்., தலைவர்களை சூழ்ந்து கொண்டு, தங்களின் இருந்து பெற்ற லஞ்ச பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு வருகின்றனர்.




ஆனால் திரிணாமுல் காங்., தலைவர்களோ, தாங்கள் வசூலித்த பணத்தை மேல்மட்ட தலைவர்களிடம் கொடுத்து விட்டதாகவும், அதை திரும்ப பெற முடியாது என்றும், அந்த பணம் தங்களிடம் இல்லை என்றும் கூறி வருகின்றனர். இது 2020 ல் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், 2021 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் திரிணாமுல் காங்.,க்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவர்களும், அரசியல் கணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநில பா.ஜ., தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், லஞ்ச விவகாரத்தில் மேற்குவங்க அரசு பொய் நாடகம் நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய ஒவ்வொருவர் மீதும் கைது நடவடிக்கை எடுப்பாரா மம்தா? மம்தாவின் உறவினர் எவ்வாறு சிங்கப்பூரில் சட்ட விரோதமாக தொழில் செய்து வருகிறார் என நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
திரிணாமுல் எம்.பி., சதாப்தி ராய் கூறுகையில், சட்ட விரோதமாக பெற்ற பணத்தை திருப்பி அளிப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிகாரியோ அல்லது உள்ளூர் தலைவரோ தாங்கள் பெறும் லஞ்ச பணத்தை முகம் தெரியாத மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பர் என்றார்.


தமிழகத்தில் வாய்ப்பு:


இதே போன்று தமிழக முதல்வரும் தங்கள் அமைச்சர்கள் மற்றும் கட்சியினரிடம் அறிவுறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-ஜூன்-201917:08:46 IST Report Abuse
Lion Drsekar ஒவ்வொரு தொகுதியிலும் 24 மணிநேர ஜபம் செய்த கூட்டங்கள் காணாமல் போனது, தீய சக்திகள் பொய்பிரச்சாரத்துக்கு பணம் மற்றும் வழி தேடுகிறது, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
27-ஜூன்-201916:08:52 IST Report Abuse
தமிழர்நீதி ஒரு 18 தொகுதிக்கு வாக்கு பதிவு இயந்திரம் தனது வேலயை காட்டிவிட்டது .அதனால் பிஜேபி ஹி ஹி .
Rate this:
Share this comment
Cancel
SRINIVASAN - hyderabad,இந்தியா
27-ஜூன்-201915:37:58 IST Report Abuse
SRINIVASAN now our tamilnadue people will realise y we have not brought bjp in tamilnadu, if they got seats, everyone in other parties fear in doing such thing. they wont as any kind of bribe in future. atleast think now take care in local election
Rate this:
Share this comment
truth tofday - india,இந்தியா
28-ஜூன்-201910:16:24 IST Report Abuse
truth tofdayஇது போல தமிழ் நாட்டில் நடக்க வாய்ப்பு இல்லை எண்ணில் நண்ர்கவேய் பி ஜி பி தலைவர்களுக்கு தமிழ் நாட்டில் நடுக்கும் ஊழல் நன்றாக தெரியும் அண்ணல் அது எ டி மிகி என்பதால் ஒரு அக்ஷண்மும் இல்லை சேகர் ரெட்டி குட்கா பாஸ்கர் எல்லாம் வெறும் கண் துடைப்பு தான் எப்படி ஜே ஜே அவர் சாகும் வரை தீர்ப்பு தள்ளி வைக்கப்ட்டுக்கு சசி என்றவுடன் உடனே வெளி வந்தேதே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X