இதே நாளில் அன்று

Added : ஜூன் 24, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன், 25, 1931 வி.பி.சிங்:
உ.பி., மாநிலம், அலகாபாத் நகரில், ராஜ வம்சத்தில், 1931, ஜூன், 25ல் பிறந்தார். அலகாபாத் மற்றும் புனே பல்கலைகளில், இயற்பியல் பட்டம் பெற்றார். ஏழைகள் மீது பரிவு காட்டி, வினோபாவேயின் பூமி தான இயக்கத்தில் இணைந்து, தன் நிலங்களை தானமாக அளித்தார்.அரசியலில் இறங்கிய இவர், காங்கிரசில் இணைந்து பணியாற்றினார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக, இருந்த போது, போபர்ஸ் ஊழல் விவகாரத்தில், அப்போதைய பிரதமர், ராஜிவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்; அதன் காரணமாக, அமைச்சரவை மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.ராஜிவுக்கு எதிரான, காங்கிரஸ் தலைவர்களையும், பிற கட்சிகளையும் திரட்டி, தேசிய முன்னணியை, வி.பி.சிங் துவக்கினார். 1989 லோக்சபா தேர்தலில், இக்கூட்டணி பெரும்பான்மை பெற்றது. பா.ஜ., ஆதரவுடன், 1989 -- 90ல், பிரதமராக இருந்தார். 2008 நவ., 27ல் காலமானார்.வி.பி.சிங், பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X