லக்னோ: உடல்நலக்குறைவு காரணமாக லக்னோ மெட்ரோ ரயில் நிறுவன ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்ரீதரன்.
டில்லியில், மெட்ரோ ரயில் சேவையை உருவாக்கியதில், அதன் நிர்வாக இயக்குனராக இருந்த ஸ்ரீதர பல நகரங்களில், இது போன்று மெட்ரோ ரயில் சேவை துவங்கியதிலும், ஸ்ரீதரன் முக்கியபங்காற்றியுள்ளார். மெட்ரோ ரயில் சேவை பணியால், 'மெட்ரோ மேன்' என,மக்களால் அழைக்கப்படுகிறார்.
டில்லியில் பெண்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம் திட்டம் கொண்டு வந்த முதல்வர் கெஜ்வாலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது லக்னோ மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை ஆலேசகராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.
தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ஸ்ரீதரனின் ராஜினாமா கடிதம் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிலேயே பதவி விலக ஸ்ரீதரன் முடிவு செய்ததாகவும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்க மறுத்ததாகவும்இந்நிலையில் தனது உடல்நலக்குறைவை காரணம் காட்டி பதவி விலகுவதற்காக கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE