பொது செய்தி

இந்தியா

சிலிர்க்க வைத்த கார்கில் போர் காட்சி

Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
குவாலியர்: ஜம்மு - காஷ்மீர்மாநிலம், லடாக் பிராந்தியத்தில் உள்ள கார்கிலில், 1999ல் நடந்த போரின், 20வது ஆண்டையொட்டி, மத்திய பிரதேச மாநிலம்குவாலியரில் உள்ளவிமானப்படை தளத்தில், மீண்டும் அந்த போர்க் காட்சிகளை, விமானப்படை நடத்தி காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது.ஜம்மு - காஷ்மீர்மாநிலம் லடாக் பிராந்தியத்தில், டிராஸ் அருகே உள்ளது கார்கில்.இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு
சிலிர்க்க, வைத்த, கார்கில், போர், காட்சி

குவாலியர்: ஜம்மு - காஷ்மீர்மாநிலம், லடாக் பிராந்தியத்தில் உள்ள கார்கிலில், 1999ல் நடந்த போரின், 20வது ஆண்டையொட்டி, மத்திய பிரதேச மாநிலம்குவாலியரில் உள்ளவிமானப்படை தளத்தில், மீண்டும் அந்த போர்க் காட்சிகளை, விமானப்படை நடத்தி காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது.ஜம்மு - காஷ்மீர்மாநிலம் லடாக் பிராந்தியத்தில், டிராஸ் அருகே உள்ளது கார்கில்.இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே, நம் எல்லைக்குள் உள்ள இந்தப் பகுதியை, பாகிஸ்தான் ராணுவம், 1999ல் ஆக்கிரமிக்க முயற்சி செய்தது.


latest tamil newsமிகவும் உயரமான, 'டைகர்' மலைப் பகுதியில் நுழைந்த பாக்., ராணுவத்துடன், நம் ராணுவம் போரில் ஈடுபட்டது.கடந்த, 1999ல், மே, 3 முதல், ஜூலை, 26 வரை, இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த இந்தப் போரில், நம் படைகள் வெற்றி பெற்றன.


சிறப்பு நிகழ்ச்சி


இந்தப் போரின்வெற்றியை, 'விஜய் திவஸ்' எனப்படும், வெற்றிதினமாக, ஒவ்வொரு ஆண்டும், நம் படைகள் கொண்டாடி வருகின்றன.தற்போது, கார்கில் போர் வெற்றியின், 20வது ஆண்டை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ள, மத்திய பிரதேசத்தின், குவாலியரில் உள்ள விமானப் படை தளத்தில், சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விமானப் படைதளபதி, பி.எஸ். தனோவா, வீரதீரத்துக்கானவிருது பெற்ற முன்னாள், இன்னாள் ராணுவத்தினர்,கார்கில் போரில்பங்கேற்றோர் என,பலர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.கார்கில் போரின் போது நடந்ததை விளக்கும் வகையில், ஒரு நிகழ்ச்சிநடத்தப்பட்டது.இதற்காக, விமானப்படை தளத்தில், ஒரு செயற்கை டைகர் மலை உருவாக்கப்பட்டது.


போர் விமானங்கள்


கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட, ஐந்து மிராஜ்-2000; இரண்டு, மிக் - 21எஸ்; ஒரு, சுகோய் - 30 போன்ற போர்விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.மேலும் இந்த விமானங்கள் வானில் பறந்து, சாகசங்களை செய்து,தங்களுடைய திறமையை, விமானப்படையினர் வெளிப்படுத்தினர்.பார்ப்பதற்கே புல்லரிக்கவைக்கும் இந்த நிகழ்ச்சி, போரின் போது நடந்த நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தும் வகையில் அமைந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.
பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக, நம் ராணுவத்தினர் நடத்திய போரில், நம் விமானப்படை மிக முக்கியபங்காற்றியது.உடனடியாக வீரர்களை கொண்டு சேர்த்தது, துல்லியமான தாக்குதல்களை நடத்தியது, ஆயுதங்களை கொண்டு சேர்த்தது என, விமானப் படை பெரும் சாதனை நிகழ்த்தியது.


12 நாளில் சாதனைநிகழ்ச்சியில்பங்கேற்ற, விமானப்படை தளபதி, பி.எஸ்.தனோவா கூறியதாவது:கார்கில் போரில், விமானப் படை முக்கிய பங்காற்றியது, நமக்கு எல்லாம் பெருமை. அப்போது, மிராஜ் - 2000 ரக போர்விமானத்தை மேம்படுத்தும் பணி நடந்து வந்தது.உடனடியாக தேவை என்பதால், அதில், ஆயுதங்களை ஏந்திச் செல்வதற்கான வசதி மற்றும் லேசர் மூலம் இயக்கக் கூடிய குண்டுகளை எடுத்துச் செல்லும் வசதி, 12 நாட்களில் செய்யப்பட்டது, மிகப் பெரியசாதனை.இந்த வசதிகள் இருந்ததால், மிராஜ் - 2000 போர் விமானங்கள் அப்போது மிகச் சிறப்பாக செயல்பட்டன. இதுவே, நம் ராணுவத்துக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
25-ஜூன்-201904:59:56 IST Report Abuse
B.s. Pillai In spite of the congress Government did not care to provide latest weapons to Our Armed Forces, it was the dedication, hard work , the courage the Armed Forces had and the presence of mind to take full advantage of the enemies smallest weaknesses to convert into our advantage and the brain work and above all , the leadership provided by the then P.M. of India,Late A.B.Vajbhayee , turned the and most disadvantageous status, from the state of defeat to victory .This is the strength of Indian Armed Forces, safeguarding us silently from all wicked minded enemies. Let us pay them back in very small way, as requested by the present P.M. Mr.Modi,, by donating Re. ONE everyday to the Army welfare Fund, the least to express our gratitude.JAI JAWAN, JAI KISAN
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X