பதிவு செய்த நாள் :
'சமாஜ்வாதியுடன் இனி கூட்டணி கிடையாது':
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு

லக்னோ: ''இனி அனைத்து தேர்தல்களிலும், நாங்கள் தனித்து போட்டியிடுவோம்,'' என, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி கூறியுள்ளார். இதன் மூலம், சமாஜ்வாதி கட்சியுடன் அமைந்திருந்த கூட்டணி நிரந்தரமாக முறிந்துள்ளது.

முறிந்தது,மாயாவதி,அகிலேஷ்,கூட்டணி


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சிகள், லோக்சபா தேர்தலில்கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

பா.ஜ.,வுக்கு பெரும் சவாலாக இந்த கூட்டணி இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொத்தம் உள்ள, 80 தொகுதிகளில், பகுஜன் சமாஜ், 10 மற்றும் சமாஜ்வாதி, ஐந்து தொகுதிகளில் மட்டுமே வென்றன.தேர்தல் முடிவுகளுக்குப் பின், 'சமாஜ்வாதி தனது தவறுகளைதிருத்திக் கொண்டால், எதிர்காலத்தில் கூட்டணி தொடரும்' என, மாயாவதி கூறியிருந்தார்.

இந்நிலையில், லக்னோவில் நேற்று அவர் கூறியதாவது: நாட்டின் நலனுக்காக, 'மகா கட்பந்தன்' என்ற மெகா கூட்டணியை அமைத்தோம். முந்தைய காலத்தில் நடந்தவற்றை, குறிப்பாக எங்கள் கட்சி மற்றும் தலித்களுக்கு எதிராக சமாஜ்வாதி எடுத்த முடிவுகளை மறந்து, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம்.

ஆனால், லோக்சபா தேர்தலுக்குப் பின், சமாஜ்வாதி கட்சியினரின் செயல்பாடுகள் மாறி உள்ளது. அதனால்,எதிர்காலத்தில் இவர்களுடன் கூட்டணி அமைத்தால், பா.ஜ.,வை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாட்டு நலனைக் கருத்தில் வைத்தும், கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில்

Advertisement

வைத்தும், இனி எதிர்கால தேர்தல்களில், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம், சமாஜ்வாதி கட்சி உடனான, பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி நிரந்தரமாக முறிந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலர், ராம்சங்கர் வித்யார்த்தி கூறியதாவது: சமாஜ்வாதி கட்சி மற்றும் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு, தலித் மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. அதனால் தான், தலித் மக்களுக்காக போராடுவதாக கூறிவரும், மாயாவதி, இந்த அவசர முடிவை எடுத்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
25-ஜூன்-201917:05:15 IST Report Abuse

suresh kumarஇன்னும் எத்தனை நாளுக்கு இதே செய்தி போடுவீர்கள்?

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜூன்-201915:33:48 IST Report Abuse

Lion Drsekarஅடுத்த தேர்தல் வந்தால் மீண்டும் கூட்டணி வைத்துக்கொள்வார்கள், வந்தே மாதரம்

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
25-ஜூன்-201915:16:32 IST Report Abuse

Chowkidar NandaIndiaசொரியல், விரியல், கடைசியில் முறியல். ஹா ஹா ஹா.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X