அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கர்நாடகா கோரிக்கையை நிராகரியுங்கள்:
பிரதமர் மோடிக்கு முதல்வர் இ.பி.எஸ். கடிதம்

சென்னை: 'மேகதாது அணை கட்டுவது தொடர்பான, கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்கும்படி, மத்திய ஜலசக்தி துறைக்கு உத்தரவிட வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர், இ.பி.எஸ்., கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகா,கோரிக்கை,நிராகரியுங்கள்,மோடி,முதல்வர்,கடிதம்


பிரதமருக்கு, முதல்வர், இ.பி.எஸ்., எழுதியுள்ள கடிதம்:கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட, சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, 2018 பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உள்ளது.

எனவே, கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்கும்படி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலைமாற்றம் துறைக்கு, நீங்கள் உத்தரவிட வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு, தமிழக அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளோம். தமிழகம், கேரளா, புதுச்சேரி என, காவிரி வடிநில மாநிலங்களின் அனுமதி பெறாமலே, கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழகம் பெரிதும்பாதிக்கப்படும்.

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்விபரத்தை, 15ம் தேதி தங்களிடம் அளித்த, கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளேன். எனவே,

Advertisement

மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக அரசுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி தரக்கூடாது.

மேகதாது அணை கட்டுவது தொடர்பான, கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை, மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது. கோரிக்கையை நிராகரிக்கும்படி, ஜல சக்தி துறைக்கு உத்தரவிட வேண்டும். உடனடியாக, இவ்விஷயத்தில் தலையிட வேண்டும். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
25-ஜூன்-201910:14:31 IST Report Abuse

Divaharகாங்கிரசுக்கும், பி ஜெ பிக்கும் கர்நாடக தேவை

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
25-ஜூன்-201909:42:18 IST Report Abuse

pattikkaattaan பழனிச்சாமி அண்ணே.. கர்நாடக அணை கட்டுவதையெல்லாம் உங்களால தடுக்க முடியாது .. கடிதாசு போட்டு என்ன ஆகப்போகுது ?.. ஆமா .. இந்த திமுக MP க்க நாடாளுமன்றத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்க்கலாம் .. எப்படியும் தண்ணி வரப்போரதில்லே ..

Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-ஜூன்-201907:26:01 IST Report Abuse

VENKATASUBRAMANIANBecause of DMK we have landed up this problem. Mk given permission to constrct dam in Karnataka now they are playing double game. Moreover no constrctive steps had been taken by dmk and admk in stead of begging karnataka.

Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
25-ஜூன்-201920:18:02 IST Report Abuse

 nicolethomsonஇந்த உண்மையை நீங்க சொன்னீங்க என்றால் உங்களையும் பக்தர்கள் என்று ட்ரோல் செய்வாங்க டாஸ்மாக்கியன்ஸ் ...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X