பதிவு செய்த நாள் :
ஆவேசம்!
பொய் புகார் கூறி பா.ஜ., ஆட்சிக்கு வந்ததாக தாக்கு  
லோக்சபாவில் காங்., தலைவர் காரசார குற்றச்சாட்டு

புதுடில்லி: ''பிரதமர் மோடி, மிகச் சிறந்த வியாபாரி. 2019 தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு, தன் பொருளை சரியாக மார்க்கெட்டிங் செய்ய முடியாமல் போனதே காரணம்,'' என, லோக்சபா காங்கிரஸ் தலைவர், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, 63, நேற்று கூறினார்.

லோக்சபா,காங்.,தலைவர்,குற்றச்சாட்டு


லோக்சபாவில் நேற்று, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:உண்மைகளை மறைத்தும், எங்களின் திட்டங்களை, 'காப்பி'யடித்தும், பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது. எங்கள் கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, அப்படியே பெயர் மாற்றி, மத்திய அரசு பயன்படுத்துகிறது.காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, 23 திட்டங்களில், 19ன் பெயரை மாற்றி, மத்திய அரசு, தான் கொண்டு வந்த திட்டமாக பின்பற்றுகிறது.

பாதுகாப்பு சட்டம்


சுதந்திரம் அடைந்ததில் இருந்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக, காங்கிரஸ் தான், பல திட்டங்களை செயல்படுத்திஉள்ளது. ஆனால், திடீரென நீங்கள் ஆட்சிக்கு வந்து, 'காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை' என்கிறீர்கள்; நீங்கள் தான் இந்த நாட்டை முன்னேற்றியுள்ளீர்கள் என்கிறீர்கள். இது, பச்சை பொய் தவிர, வேறு ஒன்றும் இல்லை.

காங்கிரஸ் ஆட்சியில் தான், பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டது; பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. காங்கிரஸ் ஆட்சியின் போது தான், ஓ.என்.ஜி.சி., - ஐ.ஓ.சி., - என்.டி.பி.சி., - எஸ்.பி.ஐ., - எச்.ஏ.எல்., போன்ற,

இன்னமும் லாபம் சம்பாதிக்கும், பொதுத்துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

காங்கிரஸ் தான், இந்த தேசத்தின் ஆன்மா. இந்தியா என்றாலே, காங்கிரஸ் தான். எங்களைப் பொருத்தவரை, கட்சியை விட நாடு தான் முக்கியம். இப்போது, ௫௨ எம்.பி.,க்கள் தான் உள்ளோம். எனினும், சாதாரண மக்களுக்காக, இந்த சபையில் தொடர்ந்து போராடுவோம்.ஜனாதிபதி உரையில், ஒரு இடத்தில் கூட, முன்னாள் பிரதமர், ஜவஹர்லால் நேருவின் பெயரை உச்சரிக்கவில்லை. நேரு பெயரை நீங்கள் உச்சரித்திருந்தால், உங்கள் மதிப்பு குறைந்து விடப் போவதில்லை. ஆனாலும், நீங்கள் அவர் பெயரை சொல்லவில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், நுாறு நாள் வேலைத்திட்டம், கல்வி உரிமைச்சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம் போன்ற, பல சட்டங்களைஅறிமுகப்படுத்தியது நாங்கள் தான்.பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினோம் என, நீங்கள் பெருமையாக கூறுகிறீர்கள். அந்த ஏவுகணைகள், காங்கிரஸ் ஆட்சியின் போது தயாரிக்கப்பட்டவை என்பதை மறந்து விட்டீர்கள்.நம் பிரதமர், மிகச் சிறந்த வியாபாரி.

அவரிடம் உள்ள பொருளை தந்திரமாக விற்கும் திறமை படைத்தவர். அந்தத் திறமை, காங்கிரசிடம் இல்லாததால் தான், தேர்தலில் நாங்கள் தோற்றோம்.நாடு முழுவதும் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. ஆனால், அது பற்றி அரசு கவலைப்படவில்லை. மோடியை புகழ்ந்தால், பதவிகள் கிடைக்கும் என்பதால், பா.ஜ., - எம்.பி.,க்கள் வாய்க்கு வந்தபடி, புகழ்ந்து தள்ளுகின்றனர்.

கைது


மோடியை புகழ்ந்தால் மட்டும் போதும், என்பது அவர்கள் எண்ணம். அமைச்சர் சாரங்கி, மோடியை

Advertisement

புகழ்வதில், எல்லையை மீறி விட்டார்.'௨ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தோம் என்று கூறி, ஆட்சியை பிடித்தீர்கள். உண்மையிலேயே ஊழல் செய்திருந்தால், சோனியாவை கைது செய்தீர்களா... ராகுலை கைது செய்தீர்களா... அவர்கள் இருவரும் இன்னமும் இங்கு இருக்கின்றனரே... அவர்கள் முறைகேடு செய்திருந்தால், சிறையில் தானே இருந்திருக்க வேண்டும்... பார்லிமென்டில் இருக்கிறார்களே! இவ்வாறு, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ஆவேசமாக பேசினார்.

அதிரடி பேச்சுக்கு வருத்தம்


பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., குறித்து ஆவேசமாக, ஆதிர் ரஞ்சன் பேசிய போது, அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் தவறு என, கருதிய சபாநாயகர், அவற்றை, சபை குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார். அவ்வாறு பேசியதற்காக, பின் ரஞ்சன் வருத்தம் தெரிவித்தார். அப்போது, 'நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது' என்றார்ன்.

சோனியா வரவேற்பு


ஆதிர்ரஞ்சன் சவுத்ரி ஆவேசமாக பேசும்போது, காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவும், தலைவர், ராகுலும் ஊக்கப்படுத்தினர். ரஞ்சன் அதிரடியாக பேசிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர், அமித் ஷா, சபையில் இருந்தனர்; அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnamurthy - chennai,இந்தியா
29-ஜூன்-201923:41:51 IST Report Abuse

krishnamurthyமுடிவாக சோனியா , ராகுலை கைது செய்யவேண்டும் என்கிறாரா ?

Rate this:
oce - chennai,இந்தியா
25-ஜூன்-201916:46:48 IST Report Abuse

oceஅரசியல் மக்கள் தொண்டுணர்வு கொண்டது. அதை காங்கிரஸ் மார்க்கெட்டாகி விட்டனர். அந்த மார்க்கெட்டில் மூழ்கிய அரசியலை மீட்டெடுத்தவர் மோடிஜி அவர்கள்.

Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
26-ஜூன்-201917:19:05 IST Report Abuse

THENNAVANஅப்போ 4 மாநிலங்களில் நீங்க ஜெயித்ததும் அப்படித்தானா அதை முதலில் சொல்லுங்க .இதெல்லாம் ஒரு மானங்கெட்ட பொழப்பாக உங்களுக்குத் தெரியலியா ...

Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
25-ஜூன்-201915:38:49 IST Report Abuse

Ram Sekarஊழல் பண்ண தெரியும் அதுவும் விஞ்ஞான ஊழல் பண்ண தெரியும்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X