சூப்பர்மேன் சாகிப், ஆல் ரவுண்டராக சாகசம்| Dinamalar

'சூப்பர்மேன்' சாகிப், 'ஆல் ரவுண்டராக' சாகசம்

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019

சவுத்தாம்ப்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், ஆல் ரவுண்டராக அசத்திய வங்கதேச அணி வீரர் சாகிப் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.







யுவராஜுக்கு அடுத்து...


உலக கோப்பை அரங்கில் ஒரு போட்டியில் 50 ரன்னுக்கும் மேல் எடுத்து, 5 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது 'ஆல் ரவுண்டர்' ஆனார் சாகிப் (51 ரன், 5 விக்.,). 2011 உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிங் (50 ரன், 5 விக்.,) இதுபோல சாதித்தார்.





* இந்தியாவின் கபில் தேவ் (1983), யுவராஜ் சிங்கிற்கு (2011) அடுத்து ஒரு உலக கோப்பை தொடரில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் ஆனார் சாகிப்.




Advertisement


* சாகிப் அல் ஹசன் நேற்று 35 ரன் எடுத்த போது, உலக கோப்பை போட்டிகளில் 1000 ரன்கள், 33 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் ஆனார். சர்வதேச அளவில் இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு அடுத்து உலக கோப்பை தொடரில் 1000 ரன்கள், 25 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது 'ஆல் ரவுண்டர்' ஆனார் சாகிப்.





* உலக கோப்பை தொடரில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய முதல் வங்கதேச பவுலர் ஆனார் சாகிப் அல் ஹசன் (29 ரன், 5 விக்.,). இதற்கு முன் சபியுல் இஸ்லாம் (2011ல் 21/4 விக்.,) இருந்தார்.





* உலக கோப்பை தொடரில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய 6வது சுழற்பந்து வீச்சாளர் ஆனார் சாகிப். முதல் இடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (2011, 16 ரன்/5 விக்.,) உள்ளார்.





* ஒருநாள் அரங்கில் சாகிப்பின் சிறந்த பவுலிங்காக இது அமைந்தது.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X