அரசியல் செய்தி

தமிழ்நாடு

குப்பை அள்ள நகராட்சி ஒதுக்கிய தொகை ரூ.28 லட்சம் வீண்

Added : ஜூன் 24, 2019
Advertisement

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி பகுதி தெருக்களில் சேகரமாகும் குப்பையை அள்ள மாதம் 28 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் 131 துப்புரவு ஊழியர்கள், நவீன குப்பை அள்ளும் லாரிகள் இருந்தும் 'குப்பையை' அகற்றாமல் விட்டுள்ளதால், 'சிவகங்கை சீமை' என்ற பெருமைக்குரிய நகரம் 'நாற்றம் பிடித்த நகராக' மாறி வருகிறது.

சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 218 தெருக்களில் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நகர் எல்லைக்குள் வீடுகள், வர்த்தக நிறுவனம், திருமண மண்டபம், ஓட்டல், லாட்ஜ் என 16 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் 18 டன் குப்பை சேகரமாகின்றன. குப்பை தேங்கினால் அதில் உருவாகும், புழு, ஈ, கொசுக்களின் மூலம் நகர் மக்களுக்கு நோய் பரவும் அபாய நிலை ஏற்படும்.

இதை தவிர்க்கவே தினமும் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் குப்பையை அகற்றியும், வீடுகள் தோறும் சென்று குப்பையை சேகரித்து லாரி மூலம் சுந்தரநடப்பில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனர்.131 ஊழியர் இருந்தும் 'நாறுது' சிவகங்கைஇப்பணியை ஒரு நாள் செய்யாமல் விட்டாலும், 'சிவகங்கை சீமை' என பெருமையோடு பேசப்படும் இந்நகரம் 'துர்நாற்றம்' பிடித்த நகராக மாறிவிடும்.

இது போன்ற சிக்கல் நகருக்கு ஏற்படாமல் இருக்கவே, நகராட்சி நிர்வாகம் தினமும் குப்பையை சேகரித்து, மறு சுழற்சி செய்ய 83 நிரந்தர துப்புரவு ஊழியர்கள், 58 ஒப்பந்த ஊழியர்களை நியமித்துள்ளது. இங்கு வீடுகள் தோறும் குப்பையை வாங்க வரும் ஒப்பந்த துப்புரவு ஊழியர்களை தான் மக்கள் பார்க்க முடிகிறது. நிரந்தர ஊழியர்களாக மாதம் 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் துப்புரவு ஊழியர்களை பெரும்பாலும் துப்புரவு பணிகளில் பார்க்கவே முடிவதில்லை.

நிரம்பி வழியும் 82 குப்பை தொட்டிநகரில் வர்த்தக நிறுவனங்கள், அதிக வீடுகள் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கு சேகரமாகும் குப்பையை போட நகரின் முக்கிய இடங்கள், வீதிகளில் டம்பர் பிளேசர் பாக்ஸ் மற்றும் காம்பாக்ட் குப்பை சேகரிப்பு பாக்ஸ் என 82 குப்பை கொட்டும் 'பாக்ஸ்களை' வைத்துள்ளனர். இதில் சேகரமாகும் குப்பையை அன்றாடம் காலை 8:00 மணிக்குள் மத்திய அரசு துாய்மை இந்தியா திட்டத்தில் வழங்கிய லாரிகள் மூலம் சேகரித்து சுந்தரநடப்பில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்ல வேண்டும்.

அங்கு மக்கும், மக்கா குப்பைகளாக தரம் பிரித்து உரம் தயாரிக்க வேண்டும்.குப்பையால் நோய் அச்சம்ஆனால் நகரில் கடந்த சில நாட்களாக குப்பை சேகரிக்கும் பணியே முடங்கி கிடக்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. குப்பையை அள்ளாத போது அப்புறம் எப்படி மக்கும் குப்பையை பிரித்து உரம் தயாரிக்கும் பணியில் நகராட்சி ஈடுபட முடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக குப்பை சேகரிக்க தெருக்களில் வைத்துள்ள 'பாக்ஸ்' களில் குப்பை நிரம்பி ரோட்டில் தேங்கி கிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்தாமல் விட்டுள்ளதால் சிவகங்கை நகர் மக்களுக்கு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.குப்பை சேகரிக்க ரூ.28 லட்சம்நகரில் சேகரமாகும் குப்பையை அகற்றி, மறுசுழற்சி செய்ய நிரந்தர, தற்காலிக துப்புரவு ஊழியர்களின் சம்பளம், குப்பை வண்டிகளின் டீசல் செலவு, வாகன பராமரிப்பு, கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர் செலவு என மாதத்திற்கு 28 லட்ச ரூபாய் வரை செலவாகிறது. இதில் அதிகபட்சம் துப்புரவு ஊழியர்களின் சம்பளத்திற்கே செல்கிறது. சம்பளம் மட்டும் வேண்டும், துப்புரவு பணியில் கவனம் செலுத்த மாட்டோம் என ஊழியர்கள் செயல்படுவது போல் நிலைமை உள்ளது.

இவ்வளவு செலவு செய்தும், நகரில் குப்பை அகற்றும் பணி கிடப்பில் உள்ளதை கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகளும், அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி., உட்பட மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேதனை.'எப்சி'.,க்கு சென்ற லாரிகள்நகராட்சி கமிஷனர் அயூப்கான் கூறியதாவது: குப்பை தொட்டிகளை எடுத்து செல்லும் 'காம்பாக்ட்' ரக லாரிகள் 'எப்சி'க்கு சென்றுவிட்டது. இதனால் நகரில் குப்பையை சேகரம் செய்ய முடியவில்லை. அந்த வண்டி வந்ததும் விரைந்து குப்பையை அகற்றி, நகரை துாய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கும் குப்பைகளை பிரித்து, உரம் தயாரிக்க 3 இடங்களில் 'கம்போஸ்ட் யார்டு' வசதியை ஏற்படுத்தி வருகிறோம். அப்பணி முடிந்ததும், பெரும்பாலான குப்பை உரமாக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X