பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் வைகை ஆற்றுக்குள் மண் இல்லை

Added : ஜூன் 24, 2019
Advertisement

மானாமதுரை : மானாமதுரையில் வைகை ஆற்றுக்குள் மண் இல்லாமல் புற்கள் வளர்ந்து காணப்படுவதால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகி வருகிறது. மானாமதுரை நகரில் வடக்கு, தெற்காக ஓடும் வைகை ஆறு நகரை இரண்டாக பிரித்து ஒருபுறம் கீழ்கரை எனவும், மறுபுறம் மேல்கரை எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு நகர் பகுதி வைகை ஆற்று பகுதிக்குள் எங்கு பார்த்தாலும் மணலாக காட்சி அளித்தது. மானாமதுரை மக்களுக்கு இதுவே மாலை நேரங்களில் பொழுதுபோக்கு இடமாக இருந்து வந்தது. நாளடைவில் மணல் திருட்டு மற்றும் போதிய மழை இல்லாததாலும், வருடந்தோறும் ஆற்றில் தண்ணீர் வராததினாலும் ஆற்று பகுதியில் மணல் இல்லாமல் தற்போது கட்டாந்தரையாக காட்சி அளித்து வருகிறது.

ஆற்று பகுதிக்குள் எங்கு பார்த்தாலும் புற்கள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் ஆடு, மாடுகள் வளர்ப்பவர்கள் ஆற்றுக்குள் மேய்த்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X