மதுரை : மன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரியதில், 'பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்றாலும், அதற்கென வரம்பில்லையா?' என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தஞ்சாவூர் திருப்பனந்தாளில் ஒரு கூட்டத்தில் சினிமா இயக்குனர் ரஞ்சித் பேசுகையில், 'மன்னர் ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பர். ஆனால், அவர் ஆண்ட காலம் தான், இருண்ட காலம். எங்கள் நிலம் பறிக்கப்பட்டது அவரது ஆட்சியில் தான். ஜாதி ரீதியாக, மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது அந்த ஆட்சியில்தான்,'என்றார். ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
உயர்நீதிமன்றக் கிளையில் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவரலாற்றில் உள்ள சில தகவல்களை குறிப்பிட்டேன். ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவது மற்றும் நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்களை நடத்திய விதம் குறித்து ஒரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை பேசினேன். பேச்சு சுதந்திரத்திற்குட்பட்டு பேசினேன். முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளாமல் போலீசார் அவசரகதியில் வழக்கு பதிந்துள்ளனர்.
எந்த சமூகத்திற்கும் எதிராகவும் பேசவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினேன். என் மீது பதிந்த வழக்கின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ரஞ்சித் மனு செய்தார்.நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: சில புத்தகங்கள் மற்றும் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை மனுதாரர் பேசியுள்ளார். இதனால் எவ்வித சட்டம்- ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. அரசியலமைப்புச் சட்டப்படி பேச்சு சுதந்திரம் உள்ளது. அதற்குட்பட்டு மனுதாரர் பேசியுள்ளார்.
வழக்கை ரத்து செய்ய வேண்டும்.நீதிபதி: பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்றாலும், அதற்கென வரம்பில்லையா? ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் நிலம் ராஜராஜ சோழன் ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டது என கூறியதற்கான ஆதாரம் எங்கே? மனுதாரர் எத்தகைய நோக்கத்தில் பேசினார்?இவ்வாறு விவாதம் நடந்தது.வழக்கை ரத்து செய்ய தமிழக அரசுத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி: வழக்குத் தொடர்பான கூடுதல் ஆவணங்களை மனுதாரர் மற்றும் அரசுத் தப்பில் ஜூலை 8 ல் தாக்கல் செய்ய வேண்டும். அன்று இறுதி விசாரணை நடக்கும், என்றார்.முன்ஜாமின் கோரி ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் வந்தது.அரசுத்தரப்பில், 'தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் தேவை' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி இன்று (ஜூன் 25) ஒத்திவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE