திருப்பூர், ஜூன் 25-
தாய்லாந்தில் கொத்தடிமையாக உள்ள, தன் மகனை மீட்டு தருமாறு, அவரது தாய், திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
திருப்பூரை அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர், மாரியம்மாள்; பனியன் கம்பெனியில், டெய்லர். இவர், திருப்பூர் கலெக்டர் பழனிசாமியிடம் அளித்த மனு:என் மகன்களான மணித்துரை, 23, மணிகண்டன், 21, ஆகியோரை, குடும்ப வறுமையால், வேலைக்காக வெளிநாடு அனுப்ப முயன்றேன்.அவிநாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், 2.70 லட்சம் ரூபாய் பெற்று, இருவரையும், தாய்லாந்து நாட்டிலுள்ள பனியன் கம்பெனிக்கு, ஜனவரி மாதம் அனுப்பி வைத்தார்.ஆனால், அங்கு ஓட்டலில், வேலைக்கு சேர்த்துள்ளனர். சம்பளமும் வழங்கவில்லை. கொத்தடிமையாக பணிபுரிந்துள்ளனர். நான், ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு, 88 ஆயிரம் ரூபாய் கொடுத்து, மணிகண்டனை திருப்பூருக்கு வரவழைத்தேன். மூத்த மகன் மணித்துரையை மீட்க முடியவில்லை.திருப்பூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, மகனை மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.கலெக்டர் பழனிசாமி கூறுகையில், ''மாரியம்மாள் மனு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் பரிந்துரைப்படி, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும்,''என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement