திருச்சி:துறையூரில், ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவிலுக்கு, திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுக்க முயன்ற எலக்ட்ரீஷியன், மின்சாரம் தாக்கி பலியானார்.
திருச்சி, துறையூர் பெரிய ஏரிக்கரையில் உள்ள மயானத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மணிகண்டன் என்பவன் உள்ளிட்ட சிலர், ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, 'மயான ருத்ரேஸ்வரர்' என்ற பெயரில் லிங்கம் வைத்து, கோவில் கட்டினர். அங்கு, பொதுமக்கள் யாரும் செல்வதில்லை.மணிகண்டன் உள்ளிட்ட சிலர் மட்டும் இரவு, 12:00 மணிக்கு மேல், நிர்வாண பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 22ம் தேதி, இக்கோவிலுக்கு, புதிதாக, நான்கு டியூப் லைட்கள் பொருத்தினர்.ஏரி நிலத்துக்கு மின் இணைப்பு கிடைக்காது என்பதால், கோவில் அருகே சென்ற மின்சார லைனில் இருந்து, திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுக்க, மணிகண்டன் முடிவு செய்தான்.அதே பகுதியைச் சேர்ந்த, எலக்ட்ரீஷியன் ராமச்சந்திரன், 21, என்பவரை, 22ம் தேதி இரவு அழைத்து வந்தான். திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது, திடீரென மின்சாரம் தாக்கி, ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.அதிர்ச்சியடைந்த மணிகண்டன், ராமச்சந்திரன் உடலை, அவருடைய வீட்டின் அருகே போட்டு, தப்பியோடி விட்டான். ராமச்சந்திரன் உறவினர்கள், துறையூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், மணிகண்டன் உள்ளிட்ட சிலர் மீது, வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE