காஞ்சிபுரம் : சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுார், மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், சாதனையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் நல்லாசிரியர், சே.நமசிவாயம் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் எல்.சாருமதி முன்னிலை வகித்தார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவில் முதன்மை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், இதை பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கும் பணமுடிப்பு வழங்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுார், டி.எஸ்.பி., ராஜேஷ் கண்ணன், பள்ளி முன்னாள் மாணவர்கள் டாக்டர் முரளிசங்கர், அவரது சகோதரி டாக்டர் திவ்யா சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பள்ளி துறைகள் சார்ந்த மாணவ தலைவர், செயலர், விளையாட்டு மற்றும் தன்னார்வ (கருணா, ஐ.எம்.டி.சி) அமைப்புகள் குழுக்களின் தலைவர் மற்றும் செயலர்கள் தேர்வு செய்யப்பட்டு பதக்கம் வழங்கப்பட்டது.விழாவில் முதன்மை துணை முதல்வர், டி.லதா, துணை முதல்வர், ராஜகுமார், இணை முதல்வர், ஈஸ்வர் உட்பட, பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE