ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு இன்று விசாரணை

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஹெலிகாப்டர் ஊழல்: இன்று விசாரணை

புதுடில்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான, ராஜிவ் சக்சேனா, சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான மனு, உச்ச நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு, ஐரோப்பிய நாடான, இத்தாலியைச் சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.


latest tamil newsரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு, அந்த நிறுவனம், 450 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., அதிகாரிகள், விமானப் படை முன்னாள் தளபதி, கே.சி.தியாகி உள்ளிட்டோரை கைது செய்தது.இந்த விவகாரத்தில் நடந்த பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, வளைகுடா நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, துபாயில் செயல்படும் நிறுவனத்தின் அதிபர், சக்சேனாவும் கைது செய்யப்பட்டான்.இது குறித்து, அமலாக்க துறை, தனியாக விசாரித்து வருகிறது.இந்நிலையில், ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கும்படி, சக்சேனா தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த, உயர் நீதிமன்றம், வெளிநாடு செல்ல, சக்சேனாவுக்கு அனுமதி அளித்தது.இதை எதிர்த்து, அமலாக்க துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. சக்சேனா வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்குமா என, இன்று தெரிய வரும்.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panorama - Chennai ,இந்தியா
25-ஜூன்-201912:11:32 IST Report Abuse
Panorama Where the Congress did not get into corruption? You name a policy or an activity in Congress Regime. Stamp paper scam, Asian Games Scam, Coal mine scam, 2G Scam, and the list goes on. Manmohan Singh may be good economist or financial expert. However, that knowledge alone does not help. One - who is the apex officer of the country - needs to be bold enough to admonish and have guts to even sack those who are erring in the political arena. Manmohan did not have the courage to speak out aloud. And the Congress as a party, miserably failed to establish impeccable administration and today they are paying the price for that. Otherwise how would they defeat Rahul in Amethi? I do not think Congress will regain power even in 2024.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
25-ஜூன்-201904:15:10 IST Report Abuse
blocked user AIMS இல் சிகிச்சை கொடுக்க முடியாதா?
Rate this:
Anand - chennai,இந்தியா
25-ஜூன்-201911:25:26 IST Report Abuse
Anandநோய் தாக்கி இருந்தால் தான் AIMS இல் சிகிச்சை கொடுப்பார்கள்....
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
25-ஜூன்-201904:03:34 IST Report Abuse
வல்வில் ஓரி கான்கிராஸ் கைய வெக்காத இடமே இல்ல பூரா ரெண்டாம் நம்பர் வேலைகளும் மன்மோகனை முன்னாடி நிறுத்தி பண்ணி வெச்சிட்டு போயிருக் கானுவோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X