ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு இன்று விசாரணை| Dinamalar

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு இன்று விசாரணை

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (4)
ஹெலிகாப்டர் ஊழல்: இன்று விசாரணை

புதுடில்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான, ராஜிவ் சக்சேனா, சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான மனு, உச்ச நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு, ஐரோப்பிய நாடான, இத்தாலியைச் சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.





ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு, அந்த நிறுவனம், 450 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., அதிகாரிகள், விமானப் படை முன்னாள் தளபதி, கே.சி.தியாகி உள்ளிட்டோரை கைது செய்தது.இந்த விவகாரத்தில் நடந்த பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, வளைகுடா நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, துபாயில் செயல்படும் நிறுவனத்தின் அதிபர், சக்சேனாவும் கைது செய்யப்பட்டான்.இது குறித்து, அமலாக்க துறை, தனியாக விசாரித்து வருகிறது.இந்நிலையில், ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கும்படி, சக்சேனா தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த, உயர் நீதிமன்றம், வெளிநாடு செல்ல, சக்சேனாவுக்கு அனுமதி அளித்தது.இதை எதிர்த்து, அமலாக்க துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. சக்சேனா வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்குமா என, இன்று தெரிய வரும்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X