பொது செய்தி

இந்தியா

இந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (12)
Advertisement
இந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை

புதுடில்லி:பார்லிமென்ட் நிலைக்குழு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் '1980 - 2010ல் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி வரை இருக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து பார்லிமென்ட் நிலைக்குழு லோக்சபாவில் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய நிதி மேலாண்மை பயிற்சி மையம், தேசிய பொதுக் கொள்கை மற்றும் நிதி பயிற்சி மையம், தேசிய பொருளாதார ஆய்வு கவுன்சில் ஆகிய அமைப்புகள் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் குறித்து தனித் தனியாக ஆய்வு நடத்தி அதன் மதிப்பு பற்றி தோராயமாக ஒரு தொகையை குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி 1980 - 2010 காலகட்டத்தில் இந்தியர்கள் ரூ.15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி வரை வெளிநாடுகளில் பதுக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்து, பான் மசாலா, குட்கா, புகையிலை, திரைப்படம், கல்வி ஆகிய தொழில்களில் இருந்து தான் அதிக அளவில் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yuva Rajan - chennai,இந்தியா
25-ஜூன்-201911:11:52 IST Report Abuse
Yuva Rajan என்னது இன்னும் கருப்பு பணம் கொண்டே வரலையா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
25-ஜூன்-201906:16:51 IST Report Abuse
தமிழ் மைந்தன் இதில் குறிப்பிட்ட கல்வி, சுரங்கம், பான் மசலா,குட்கா, ரியல் எஸ்டேட் இவைகள் போக கட்டிங்,கமிஷன் எல்லாமே திமுகவில் உண்டு எனவே, இந்த பணம் திமுகவிற்கு மட்டுமே சொந்தமானது.....
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
25-ஜூன்-201912:02:29 IST Report Abuse
JIVANகண்டைனர் கமிஷனை பணமதிப்பிழப்பு கமிஷனை விட்டுடீங்களே, ஓ 1980 - 2010 இடைப்பட்ட கணக்கெடுப்போ அப்போ சரி...
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201906:09:14 IST Report Abuse
Raj முதலில் இந்த நபர்களுடைய பெயரை எந்த விதமான தயவுமின்றி வெளிப்படுத்த வேண்டும். பணம் கொண்டு செல்லப்பட்ட வழிமுறை வெளிப்படுத்தப்பட வேண்டும். இதில் அரசு சட்ட திட்டங்கள் எவ்வாறு மாற்றப்படட்டன என்று தேதி வாரியாக அறிவிக்கப்பட வேண்டும். பா ஜ க , காங்கிரஸ் இரு கட்சிகளுமே இதற்கு உடந்தையாய் இருந்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
25-ஜூன்-201910:10:40 IST Report Abuse
DSM .S/o PLM பா ஜெ க காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே இதற்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும்.. அய்யா இது 1980 - 2010 , அதாவது பாஜக ஆட்சிக்கு வரும் முன்னரே சேர்க்கப்பட்ட பணம்.. அதில் பாஜக வை எப்படி சேர்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.. இங்கே பலர், தங்களை நடுநிலையாளர் என்று காட்டிக்கொள்ள முயல்வதும், அந்தப்போர்வையில் காங்கிரசை திட்டுவது போல எழுதிவிட்டு, உண்மையில் சேற்றை பாஜக மீது வாரி இருப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.. காங்கிரசின் மீது சேற்றை வாரி இறைக்க படுவது பற்றி அக்கட்சி கவலைப்படத்தேவையில்லை ..ஏனெனில் அது ஏற்கெனவே சாக்காடையில் தான் நிற்கிறது..ஆனால் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் கூற முடியாத தூய்மையான பாஜக வின் மீது ஒரு புள்ளி விழுந்தால் கூட அது அக்கட்சியின் பெருமைக்கு களங்கம்....
Rate this:
Share this comment
T.v. Ramakrishnan Iyer - Bangalore,இந்தியா
25-ஜூன்-201912:33:54 IST Report Abuse
T.v. Ramakrishnan Iyerஎந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் கூற முடியாத தூய்மையான பிஜேபி?? தமிழ்நாட்டில் கால் ஊன்ற ADMk பண்ணின ஊழல்களை மறைத்து காப்பாத்தி அதனுடன் கூட்டு வைத்துக்கொண்டிருக்கும் பிஜேபி ஊழல் இல்லாத தூய்மையான கட்சியா??...
Rate this:
Share this comment
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201913:20:39 IST Report Abuse
Rajஇரு கட்சிகளும் தூய்மையாக இருந்தால் ஏன் சென்ற வருடம் ....இந்தியாவில் தேர்தல் செலவுக்கு வெளிநாட்டு பணம் கொடுத்தால் தவறில்லை என்று ஒரு மனதாக சட்டம் நிறைவேற்றினார்கள். அதுவும் முன் தேதியிட்டு இந்த சட்டத்தை அமல் படுத்தியுள்ளனர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X