பொது செய்தி

இந்தியா

சந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் முடிவு

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (35)
Advertisement
சந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்  முடிவு

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு, அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டியுள்ள சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள, மாநாட்டு மண்டபத்தை இடிக்க, இப்போதைய முதல்வர், ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளார்.
ஆந்திர மாநில தலைநகர், அமராவதியில், கலெக்டர்கள் மாநாடு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று(ஜூன் 24) நடந்தது. 'பிரஜா வேதிகா' என்ற அரங்கில், அந்த மாநாடு நடந்தது.

அதில், முதல்வர், ஜெகன் மோகன் பேசியதாவது:முந்தைய அரசு கட்டிய, அங்கீகாரமில்லாத கட்டடத்தில் அமர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணா நதிக் கரையோரம் எந்த கட்டடங்களும் கட்டப்படக் கூடாது என, ஒழுங்குமுறை விதிமுறைகள் கூறுகின்றன. அதை மீறி, இந்த பிரமாண்ட கட்டடத்தை, முந்தைய அரசு கட்டியுள்ளது.இதில், நாளை (இன்று) போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. அது தான், இங்கு நடக்கும் கடைசி கூட்டம். அதற்குப் பின், இந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்படும்.அதுபோல, கிருஷ்ணா நதி கரையோரம் உள்ள அனைத்து கட்டடங்களும் இடிக்கப்படும். அந்தப் பணிகள், புதன் கிழமை முதல் துவங்கும்.இவ்வாறு ஜெகன் மோகன் கூறினார்.






பிரஜா வேதிகா அருகே, சந்திரபாபு நாயுடு, பிரமாண்ட பங்களா கட்டியுள்ளார். அவ்வப்போது வந்து ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டுள்ள அந்த பங்களா வீடும், இடிக்கப்பட உள்ளது.

இது குறித்து, சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி, எம்.எல்.ஏ., கோரந்தலா புச்சையா சவுதாரி கூறியதாவது:மக்கள் நலனுக்காக, பிரஜா வேதிகா கட்டப்பட்டு உள்ளது. தனிநபர் பயன்பாட்டில் அது இல்லை. அதுபோல, கிருஷ்ணா நதிக்கரையோரம் பல கட்டடங்கள், பல ஆண்டுகளாக உள்ளன. அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவற்றையும், ஜெகன் இடிப்பாரா?இந்த கட்டடங்களால், எனக்கு தெரிந்து, 50 ஆண்டுகளாக, கிருஷ்ணா நதி ஓட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.





முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான, மறைந்த, ராஜசேகர ரெட்டியின் மகன். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
26-ஜூன்-201912:43:53 IST Report Abuse
இந்தியன் kumar எதிர் வரும் தேர்தலில் இந்த நடவடிக்கை சரியா தவறா என்று தெரிய வரும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
26-ஜூன்-201912:42:39 IST Report Abuse
இந்தியன் kumar சட்டத்துக்கு புறம்பாக யார் தவறு செய்தாலும் தவறு தவறு தான் , ஆக மொத்தத்தில் மக்கள் பணம் வேஸ்ட் ஆக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா
28-ஜூன்-201908:14:24 IST Report Abuse
Krishnamoorthy Venkataramanவிதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பது பண, மற்றும் கால விரயம்.. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் வேறுமுறையில் அரசு இலாக்காக்களை அங்கு செயல்பட வைக்கலாம். "ஆக்கும் பொருள்கள் யாவும் அரசுக்கு சொந்தம். அஷிப்பதற்கு உரிமையில்லை. ஆகையால், அங்கு அரசின் பெரிய அலுவலகங்களை மாற்றலாம். பயன்படுத்தப்பட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
26-ஜூன்-201910:34:40 IST Report Abuse
ganapati sb பொது நோக்கத்திற்காக நாயுடு கட்டியிருந்தால் தவறில்லை அதை இடிப்பது ரெட்டிக்கு தேவையற்ற வேலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X